சனியின் அருளால் கும்பம், மீன ராசிக்கு வரும் முன்னேற்றம்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

  • சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

    Advertisement

    ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்ப ராசி பலன் (Kumbam)

    சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வார்த்தைகளில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதத்தில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த குரு பெயர்ச்சி வரை ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

    Advertisement

    சனி வக்ர பெயர்ச்சியில் நிறைய நன்மைகள் காணப்பட்டாலும் தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நன்மையைத் தரும். வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். அனுகூலமும், சந்தோஷமும் காணப்படும்.

    கழுத்து வலி, நரம்பு, தலைவலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. நியாபக மறதி ஏற்படும். எதிரிகளை நினைத்தே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். லட்சுமி நரசிம்மர் காயத்ரியை கேட்பது ஏற்றத்தைத் தரும்.

    மீனம் ராசி பலன் (Meenam)

    மீன ராசியினருக்கு ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதால் கால், பாதம், மூட்டு வலி, வண்டி வாகனம் தொடர்பான விஷயங்கள், நெருப்பு, வழுக்கலான இடங்கள், படிக்கட்டுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மகான்கள் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

    Advertisement

    வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ஜென்ம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வது ஏற்றத்தைத் தரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரப் பெயர்ச்சி நடைபெறுகிறது என்பதால் வாகனங்களில் செல்லும்போது, ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

    அபிராமி அந்தாதியைப் படிப்பது ஏற்றத்தைத் தரும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். நரசிம்மர் காயத்ரி, சுப்ரமணிய புஜங்கம் போன்றவற்றை கேட்பது ஏற்றத்தைத் தரும். காது, மூக்கு, தொண்டை பாதிப்புகளில் கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Sani vakra peyarchi palan: Let us look at the benefits, areas requiring caution, and deities to be worshipped by natives of the Kumbam and meenam (Aquarius and Pisces) signs during Saturn's retrograde transit in Pisces.