Sani Vakra Peyarchi Palangal: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், மேஷ ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் ராசியினருக்கு நல்ல சம்பாத்தியம் இருக்கும். ஆனாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் நிக்காத தன்மை ஏற்படும். மருத்துவ விரயம் அதிகமாக இருந்திருக்கும். இந்த வீண் செலவினங்கள் எல்லாம் குறையும். 12 ஆம் இடத்தில் சனி வக்கிரமாவதால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம், நல்ல சாப்பாடு சாப்பிடும் யோகம் உண்டாகும். தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். அந்தப் பணத்தை சேமிப்பது, முதலீடு செய்வது போன்றவற்றை செய்வீர்கள். பழைய வீடு, பழைய கார் போன்றவற்றை வாங்குவீர்கள். 12 ஆம் இடம் என்பது இல்லறம், தாம்பத்தியத்தைக் குறிக்கும். திருமணமானாலும் இல்லற வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் போன்றவை பரிபூரணமாக நீங்கும். பாத சனியில் திருமணம் முடிவாவது போல் வந்து நின்றிருக்கும். சம்மந்தி சண்டை, போன் சண்டை வந்தெல்லாம் கூட நின்றிருக்கும். அந்த தன்மை எல்லாம் பரிபூரணமாக கிடைக்கும். ஆனால் இந்த சனி வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல வரன்கள் வந்து சேரும். தொலைதூரத்தில் இருந்து வரன் வரும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடப்பது, செட்டிலாகும் யோகம் உண்டாகும். கெளரமாக, மனதிற்குப் பிடித்த வகையில் உங்கள் திருமணம் நடக்கும். சுப செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். சனி 12 இல் வக்கிரமாவதால் உங்கள் பெயரிலேயே முதலீடு செய்யத் தொடங்குவீர்கள். புதிய வேலையைத் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வீட்டில் நல்ல வேலை ஆட்களை வைப்பீர்கள். பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வீர்கள். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக குறையும். மாமனார் மாமியார் பிரச்சனை, பெற்றோர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் நீங்கி அற்புதமான காலகட்டமாக இருக்கும். மாணவர்களுக்கு மேற்படிப்பில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். சோம்பலும், மந்தத் தன்மையும் அதிகரிக்கும். நல்ல கல்லூரிகளில் படிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் ஆகும் அமைப்பு உள்ளது. நீட் தேர்வு முடித்தவர்களுக்கு தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. கடன் அதிகமாக வாங்கும் அமைப்பு உள்ளது. அந்த கடனை சுப கடனாக மாற்றுவது நன்மை பயக்கும். அதாவது, கடன் வாங்கி முதலீடு செய்வது, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவை ஏற்றத்தை தரும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். மீறி செய்தால் அவமானப்படும் சூழல் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் திருஷ்டி அதிகமாக இருக்கும். வாழ்க்கையை சிறிது பிரைவேட்டாக வைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய அந்தரங்க விஷயங்கள், முதலீடு விஷயங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. எந்த விஷயமானாலும் கணவன், மனைவி பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.மேஷம்
திருமண யோகம்
யோகம்
கவனம்