வக்ர சனியின் ஆட்டம் ஆரம்பம்... மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டும், ஆபத்தும் கூடவே வருகிறது.. உஷார்

  • Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம்

    மிதுன ராசியினருக்கு 10 இல் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வருவதால் தொழிலில் அற்புதமான முன்னேற்றம் கிடைக்கும். நல்ல லாபங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை மாற்றம் உண்டாகும். வேலை, தொழில் சிறப்பாக இந்த சனி வக்ர பெயர்ச்சியில் அமையும்.

    முன்னேற்றம்

    கல்வி அமைப்பில் மிதுன ராசி மாணவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் படிப்பில் கவனக் குறைவு ஏற்பட்டிருக்கும். சனி பகவான் இப்போது வக்கிரமாவதால் மாணவர்களுக்கு மந்தத் தனம் குறையும். எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்கும். போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், ஜூடிசியல் தேர்வுக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    திருமண ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் நிறைய பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் திருமண வாழ்க்கையில் இருந்திருக்கும். அந்த நிலைமைகள் இனி உங்களுக்கு மாறும். யாராவது ஒருவர் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகை செய்வார்கள். நீண்ட நாட்களாக திருமணமாகதவர்களுக்கு அம்மா வழி உறவினர்கள் மூலமாக வரன் அமையும் யோகம் உண்டு.

    கவனம்

    அம்மாவிடம் வாக்குவாதம் செய்யும் அமைப்பு, திருமண வாழ்க்கை, உங்கள் முடிவுகளில் அம்மாவின் அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் எல்லையை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காதலில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத அவமானங்களில் சிக்கும் வாய்ப்புள்ளது.

    Advertisement

    சொத்து சார்ந்த பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் ஆவணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சொத்துகள் வாங்கும்போது லீகல் பார்த்து வாங்குவது நல்லது. கார் வாங்குவது, பைக் வாங்குவது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செலவுகளைச் செய்வீர்கள். வீட்டை புனரமைப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது, புதிய அறை கட்டுவது போன்ற அமைப்பு உள்ளது.

    பண வரவு

    பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் வழியில் நிறைய செலவுகள், உங்களுக்கான மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களில் பழுது போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. நெருப்பு, கூர்மையான ஆயுதம், உயரத்தில் வேலை செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    English Summary

    Sani vakra peyarchi: Lord Saturn, currently transiting the Pisces sign, will enter a retrograde phase on July 27. This phase will last until December 11. Let us look at the effects this period of Saturn's retrograde motion will have on individuals born under the Mithunam sign.