Sani Vakra Peyarchi: ரிஷப ராசிக்கு சொந்த தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. இந்த விஷயங்களில் கவனம்


  • சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    Advertisement

    சனி வக்ர பெயர்ச்சி

    அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

    அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு 11 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 10 ஆம் இடத்திற்கான ஆதிபத்தியத்தை பெறுகிறார். 10 ஆம் இடம் பெரியளவில் பாதிக்கப்படாது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. சொந்த தொழில் செய்வதற்கான திட்டமிடுவோருக்கு அற்புதமான காலகட்டம். 10 ஆம் இடம் என்பது கர்மகாரியத்தை குறிக்கக் கூடியது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் 100 சதவீத ரிசல்டை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    கவனம்

    நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். பொறுப்புகள் கூடும். நிறைய பாரமான விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்படும். என்ன செய்தாலும் பத்தவில்லை என்று உங்களை குறைசொல்ல ஆரம்பிப்பார்கள். உங்களை டென்ஷனாக்கி எமோஷலனாக பேச வைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

    Advertisement

    பொறுமை, நிதானம்

    மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். உடல்நல பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. முட்டி வலி, முழங்கால் வலி, மேல் வயிறு பிரச்சனை, இருதய கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் பார்வையாக ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவில் நிதானம் அவசியம். கணவன், மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் பொறுமையை கையாளுவது அவசியம்.

    English Summary

    Sani Vakra Peyarchi Palan: Let us look at the benefits that individuals belonging to the Rishabam rasi (Taurus sign) will receive due to Saturn's retrograde transit.