சனி வக்ர பெயர்ச்சி: மீன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. பேச்சில் தான் கண்டமே.. கவனம்


  • சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    Advertisement

    சனி வக்ர பெயர்ச்சி

    அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

    அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினருக்கு ஏற்கனவே ஏழரை சனி ஜென்ம சனியாக இருந்தது. இப்போது சனி பகவான் வக்ரம் பெறுவதால் விரயச் சனியாக மாறும். 12 ஆம் இடத்தில் சனி உள்ளது. செலவுகள் குறையும். வரவுகள் அதிகமாக இருக்கும். எல்லா பிரச்சனைகளும் கட்டுக்கோப்பாக இருக்கும். உங்களை நீங்களே யாரென்று புரிந்து கொண்டு உங்கள் சொந்த வலிமையால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

    வார்த்தையில் கவனம்

    சனி பகவான் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வார்த்தையைவிட்டு சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களால் செய்ய முடிந்த வேலைகளை மட்டும் செய்கிறேன் என்று சொல்வது நல்லது. முடியாததை சொல்லி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    Advertisement

    138 நாட்கள்

    ஆவணங்களில் கையெழுத்து போடும்போது ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் படித்துவிட்டு போடுவது நல்லது. குடும்பத்துக்கே செலவு செய்தாலும் அதில் கணக்குப் பார்க்காமல் செய்ய வேண்டும். செய்ததை சொல்லிக் காட்டினால் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக செல்லும் சூழல் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. 138 நாட்களும் தினந்தோறுமே பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது.

    முன்னேற்றம்

    6 ஆம் இடத்தை சனி இருப்பதால் எதிரிகள், கடன்கள், நோய்கள், சட்டம், வழக்கு, துன்பம், குறைகள், குற்றங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எல்லா விஷயத்திலும் நன்மைகள் ஏற்படும். ஏதோ ஒரு நல்லது நடக்கிறது என்கிற நம்பிக்கை பிறக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமும், நம்பிக்கையும் பிறக்கும். எதிரிகளை அழிப்பதற்கான நேரம் ஏற்படும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

    Advertisement

    ஈகை

    பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஈகை மனப்பான்மையோடு வாழ கற்றுக்கொள்வது நன்மையைத் தரும்.

    English Summary

    Sani Vakra Peyarchi Palan: Let us look at the benefits that individuals belonging to the Meenam rasi (Pisces sign) will receive due to Saturn's retrograde transit.