சனி வக்ர பெயர்ச்சி: மிதுன ராசிக்கு சனி பகவான் தரும் அதிர்ஷ்டம்.. மறந்து இதை செய்திடாதீங்க


  • சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    Advertisement

    சனி வக்ர பெயர்ச்சி

    அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

    அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    மிதுனம்

    மிதுன ராசியினருக்கு வக்ர சனியாக இருக்கக்கூடியவர் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். 9 ஆம் இடத்தில் இருந்து கொண்டு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வரும் லாபங்களை சேமித்து வைத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். செலவுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாகவும் கறாராகவும் இருக்க வேண்டும்.

    செலவுகளில் கவனம்

    தேவையில்லாத செலவுகளைக் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களால் தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முன் சகோதரர்கள், வயதில் மூத்தவர்கள், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. அச்சப்படவும் தேவையில்லை.

    Advertisement

    இடமாற்றம்

    சிலருக்கு நல்ல இடமாற்றங்கள் உண்டாகும். தூரமான பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இயற்கைத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். மிதுனத்திற்கு 3 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். சனி 3 ஆம் பார்வையால் முயற்சிகளில் நிறைய தொய்வுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    பிரச்சனைகள் நீங்கும்

    உள்ளார்ந்த வேகம், விவேகம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகள், நோய்கள், கடன்கள், சட்டம், வழக்கு, துன்பம் போன்றவற்றை தவிர்ப்பதற்கோ, விலகி செல்வதற்கோ வாய்ப்புகள் வந்து சேரும். நீதிமன்றம், வழக்கு என்று அழைந்து கொண்டிருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்ப்பீர்கள். உறவுகளுடனான பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்

    English Summary

    Sani Vakra Peyarchi Palan: Let us look at the benefits that individuals belonging to the Mithunam rasi (Gemini sign) will receive due to Saturn's retrograde transit.