சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். கும்ப ராசியினருக்கு ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது வக்ர சனி நடப்பதால் உங்களுக்கு ஜென்ம சனிக்கான பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய வேலை, கடமைகளை உங்கள் பாட்டுக்கு நீங்கள் செய்யலாம். கடன்களை கட்டுவது, வரவுகளை வரவு வைப்பது, தொழில் தொடங்குவது, தொழில் செய்வது என்று எல்லா வேலைகளையும் எப்போதும் போல செய்து கொண்டே இருக்கலாம். 3 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் முயற்சிகளில் தொய்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலைகளை தள்ளிப்போடுவது, வேலைகளை மறப்பது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் என்பதனால் இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பெழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்து முடிப்பது நல்லது. இதனால், பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம். சகோதரர் வகையில் ஏதாவது கோளாறு, பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சனி பகவானை பொருத்தவரையில் கும்பத்திற்கு 7 ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். 7 ஆம் இடம் என்பது கணவன், மனைவி, குடும்ப உறவுகள் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்யக் கூடியவர்கள் உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம். தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. எதுவோ நடக்கிறது என்பது போன்ற எண்ணங்கள், சந்தேகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. பயணத்தின்போது யாரோ ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. இரவு பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொலைதூரம் பயணம் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இருசக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. கழுத்து வலி, முதுகு வலி இருப்பவர்கள் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான அங்கீகாரம், பெயர், புகழ் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலை 138 நாட்கள் தொழில் செய்யக்கூடிய இடத்தில் இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும். பணப் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் பொருள்கள் விநியோகித்த இடத்தில் இருந்த சரியாக காசு, பணம் வராத சூழ்நிலை, பொருள்கள் சேதமடைவது போன்ற துன்பங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 138 நாட்களுக்குப் பிறகு இதுதொடர்பான எல்லா பிரச்சனைகளும் நிச்சயமாக நிவர்த்தியாகும்.சனி வக்ர பெயர்ச்சி
கும்பம்
முயற்சிகளில் தொய்வு
ஆரோக்கியம்
பயணங்கள்
கவனம்
பிரச்சனை தீரும்