சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால்
தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மகர ராசியினருக்கு ஏழரை சனி முடிந்து விடுதலை பெற்றிருப்பீர்கள். இப்போது வக்கிர சனி ஏற்பட்டுள்ளதால் வரும் 138 நாட்களுக்கு ஏழரை சனி பாதிப்புகளை காணும் அமைப்பு உள்ளது. ஜூலை 26 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதால் உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுக்கு ராசிநாதனே சனி பகவனாக இருப்பதால் மிகப்பெரிய துன்பங்கள், துக்கங்கள் ஏற்படாது. ஆனால், சனி பார்க்கும் இடங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு விரக்தி மனப்பான்மை, கோபத் தன்மைகள், படிப்பில் வெறுப்பு, ஆசிரியருடன் ஒத்துப் போகாத தன்மைகள் ஏற்படும். சகோதர வர்க்கங்கள் எனும் இளையவர்கள் மூலமாக தொல்லைகள் வரும். உங்கள் கருத்தால் அவர்கள் விலகிச் செல்லும் வாய்ப்புள்ளதால், வாக்குவாதம், வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பல வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண தடை பரிபூரணமாக நீங்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். இளையவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி, குடும்ப உறவில் இணக்கமாகச் செல்வது நல்லது. பெரிய பாதங்கள் இந்த காலத்தில் ஏற்படாவிட்டாலும், அவரவர் பாதையில் செல்லட்டும் என்றும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.சனி வக்ர பெயர்ச்சி
மகரம்
கவனம்
முன்னேற்றம்
விட்டு கொடுப்பது நல்லது