Sani Vakra Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் கடக ராசி.. சொத்துகளை குவிக்கும் யோகம்

  • Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், கடக ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    கடகம்

    கடக ராசியினருக்கு பாக்கிய சனி வக்கிரமாக மாறுகிறது, அதேசமயம் குரு பார்வை பெறுவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரம், குடும்பம், வேலைவாய்ப்பு, தொழில், குழந்தை தொடர்பான விஷயங்களில் நிறைய நன்மைகள் நடக்கும். திருமண வாழ்க்கையில் ஏராளமானோரால் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். துணையிடமிருந்து பரிபூரணமான அன்பு கிடைக்கும்.

    சுபகாரியம்

    உங்களைச் சுற்றியிருந்த பிரச்சனைகள், திருஷ்டிகள் பரிபூரணமாக நீங்கும். திருமணமாகாத கடக ராசியினருக்கு மனதிற்குப் பிடித்தது போன்ற வரன்கள் அமையும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும், செட்டிலாகும் யோகம் உண்டாகும். சிறிது சிறிதாக கொடுத்து வராமல் இருந்த பணங்கள் உங்களை வந்து சேரும். சொத்துகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    லாபம் கொட்டும்

    அப்பா வழி சொத்துகள் மூலமாக லாபம் கிடைக்கும். அப்பாவுடைய ஆலோசனையைப் பெற்று சொத்து வாங்குவோருக்கு அதன் மூலமாக யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் மூலமாக லாபம் பெறும் வாய்ப்பு உண்டாகும். அண்ணன், அக்கா என்ற முறையில் வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.

    வீடு, நகை வாங்கும் யோகம்

    பாக்கியத்தில் சனி இருந்தாலும் நிலம், வீடு வாங்குவது, நகை வாங்கு நன்மை தரும். ஆனால், பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்ட், ஸ்பெகுலேசன் தொடர்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நன்மையைத் தரும். தங்கம் வாங்குவது உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் செய்யும் முதலீடுகள், நகை வாங்குவதை மற்றவர்களிடம் சொல்வதை, வெளிப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    தானம்

    வெளியில் சொல்லக் கூடாத விஷயங்களில் அமைதி காப்பது நன்மை பயக்கும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்படும் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டு. உங்கள் முன்னோர்களே உங்களுக்கு குழந்தையாக பிறக்கும் அமைப்பு உள்ளது. ஏழைகளுக்கு பால் தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Sani vakra peyarchi: Lord Saturn, currently transiting the Pisces sign, will enter a retrograde phase on July 27. This phase will last until December 11. Let us look at the effects this period of Saturn's retrograde motion will have on individuals born under the Kadagam sign.