Sani vakra peyarchi: கும்ப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. டாக்சிக் உறவில் இருந்து இனி விடுதலை

  • Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு ராசிநாதன் சனி 2 ஆம் இடத்தில் சென்று வக்கிரமாக இருக்கிறார். இப்போது ராகு பகவான் தான் பல தொல்லைகளை தந்து கொண்டிருக்கிறார். இந்த சனி வக்ர பெயர்ச்சியில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் காணப்படும். பதட்டம், படபடப்பை தவிர்ப்பது நல்லது. கும்ப ராசி இளம் வயதினருக்கு வயதுக்கு மீறிய செயல்களைச் செய்திருப்பார்கள். ராசியில் ராகு இருப்பதால் ஒருவிதமான கோபம் இருந்து கொண்டே இருந்திருக்கும். இனி அந்த நிலைமை மாறி குழந்தைகள் உங்கள் பிள்ளைகளை கேட்க ஆரம்பிப்பார்கள்.

    மாற்றங்கள் வரும்

    தவறான ரிலேசன்ஷிப்பில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுதலை பெறக்கூடிய நேரமாக இந்த காலகட்டம் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயங்கள் உங்களை விட்டு சென்றுவிடும். பணம் வாங்கிவிட்டு கொடுக்காமல் இருப்பவர்களின் நிஜமுகம் வெளியில் வரும். நல்ல மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிறைய விஷயத்தை புரிந்து கொள்வீர்கள். எது உங்களுக்கு வேண்டும், வேண்டாம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

    Advertisement

    மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து வரும்போது சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. நல்ல வரன் அமையும், திருமண யோகம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல வரன்கள் கிடைக்கும், தொலைதூர வரன்கள் அமையும் வாய்ப்புள்ளது. காதல் திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். உங்களை ஏமாற்றிய நபரை மிரட்டி, காவல் துறை மூலமாக திரும்ப பணத்தை வாங்கும் தன்மை ஏற்படும். உங்கள் மேல் மற்றவர்களுக்கு பயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வண்டி வாகனங்களை பார்த்து ஓட்டிச் செல்வது நல்லது.

    Advertisement

    பூர்வீக சொத்து கைக்கு வரும். கடன் அமைப்புகள் நன்றாக இருக்கும். கடன் விஷயத்தில் யோசித்து செயல்படுவீர்கள். ஐடி, டெக்னாலஜி துறையில் இருப்பவர்களுக்கு கனவு வேலை, கனவு நிறுவனத்தில் பணியாற்றும் யோகம் உண்டாகும். யாருக்கும் இலவசமாக ஆலோசனை வழங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களைப் பற்றி புரிந்து கொள்ளாத இடத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகளை சாப்பிடும் மேலோங்கும் அதில் மிகுநத் கவனம் தேவை

    English Summary

    Sani vakra peyarchi: Lord Saturn, currently transiting the Pisces sign, will enter a retrograde phase on July 27. This phase will last until December 11. Let us look at the effects this period of Saturn's retrograde motion will have on individuals born under the Kumbam sign.