Sani Vakra Peyarchi: சிம்ம ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வெளிநாடு செல்லும் யோகம்

  • Sani Vakra Peyarchi Palan: மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    9 கிரகங்களில் அதிகமான நாட்கள் பெயர்ச்சியாகக் கூடியவர் சனி பகவான். மெதுவாக நகரக் கூடிய சனி ஒரு பாவக் கிரகமாகும். சனி கிரகமானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னோக்கி நகரும் இதுவே சனி வக்கிர பெயர்ச்சியாகும். பாவக் கிரகம் வக்கிரமாகும் போது அதன் தாக்கம் சிறிது செயலிழக்கும். நல்லவை அதிகமாகவும், கெட்டவை குறைவாகவும் நடக்கும். அந்த வகையில், கடக ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம்

    சிம்ம ராசியினருக்கு அஷ்டமசனியானது பெரிய பாதிப்புகளைக் கொடுத்திருக்கும். இப்போது சனி வக்கிரமாவதால் பெரிய ஆறுதல் உங்களுக்கு கிடைக்கும். மனம் தெளிவடையும். குழப்ப நிலைகள் மாறி அமைதியடைவீர்கள். பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படாமல் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். தொலைதூர பயணங்கள் மூலமாக லாபம் கிடைக்கும்.

    குரு பார்வை

    வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான தடைகள், தடல்கள் நீங்கும். கையில் காசு இருந்தும் சொத்து வாங்க முடியாதவர்கள் புதிய வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சனி வக்கிரப் பெயர்ச்சியைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. குரு பார்வை பெற்றுள்ள சனி என்பதால் நல்ல மாற்றங்களையும், ஆறுதலையும் கொடுக்கும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    வெளிநாடு யோகம்

    தொலைதூரத்தில் சென்று கல்வி கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த ஆசைகள் நிறைவேறும். சிங்கப்பூர், மலேசியா சென்று படிப்பது, அங்கேயே வேலை கிடைப்பது, செட்டிலாவது போன்ற பாக்கியம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. நிறைய பேர் சிஏ கிளியர் செய்யும் யோகம் உண்டாகும். நீண்ட காலப் பிரச்சனைகளை எல்லாம் அடுத்தடுத்து முடியும்.

    திருமண ஆசை

    விரக்தி மன நிலை எல்லாம் மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள். காதல் ஆசைகள் வரும். காதல் பாடல்கள் கேட்பீர்கள். திருமணத்தின் மீது ஆசை வரும். நல்ல வரன்கள் கிடைப்பார்கள். இதுவரை சிக்கியிருந்த பணங்கள் எல்லாம் உங்களிடம் வந்து சேரும் அமைப்பு உண்டாகும். கணக்கு வழக்குகளைப் போட்டு சேமிப்பு குறித்த எண்ணங்கள் உருவாகும். ஏதாவது ஒரு சொத்தை கடன் வாங்கி வாங்கும் அமைப்பு உள்ளது. பழைய வீடுகளை வாங்கி புதுப்பிப்பீர்கள்.

    Advertisement

    பரிகாரம்

    உடன் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றி பேசினாலும் அது வெளியில் செல்வதற்கான செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. யாரையும் நம்பி உங்களுடைய வேலையை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் வேலை செய்பவர்கள், உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை. ஞாயிற்றுக்கிழமையில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது, பசு மாடுகளுக்கு தானமாக கொடுப்பது ஏற்றத்தை தரும்.

    English Summary

    Sani vakra peyarchi: Lord Saturn, currently transiting the Pisces sign, will enter a retrograde phase on July 27. This phase will last until December 11. Let us look at the effects this period of Saturn's retrograde motion will have on individuals born under the Simmam sign.