செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் எவை, என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு 3 ஆம் தேதி புதன் பகவான் உச்சமாகிறார். சுக்கிர பகவான் ஆட்சி பெறப் போகிறார். விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்போருக்கு இந்த காலகட்டத்தில் விவாகரத்து கிடையாது. பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி, காதலன், காதலியுடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு ஒன்று சேருவீர்கள். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்வோருக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். நல்ல திருமண வரன்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். பெண்கள் அழுகு, தோல், காஸ்மெட்டிக் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மனைவி பெயரில் முதலீடு செய்வது, நல்ல விஷயங்களைத் தொடங்குவது போன்றவற்றை செய்வது நல்லது. சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சுக்கிர ஓரையில் புதன் புத்தியில் அருகில் இருக்கும் லட்சுமி கோயிலில் வழிபாடு செய்வது நல்லது. 20, 21, 22 ஆம் தேதிகளில் புதிய விஷயங்களை செய்வது, செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மிதுன ராசியினருக்கு நீங்கள் செய்யும் முயற்சிள் இந்த மாதம் தடைபடும் என்பதால் அடுத்த மாதம் முயற்சி செய்வது நன்மை பயக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. கடனை அடைப்பதற்கான யோகம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கிய பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. விட்டுவிட்ட தேவையில்லாத பழக்கவழக்கத்தை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது மேன்மையைத் தரும். 24 ஆம் தேதி சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். இந்த தினம் உங்களுக்கு குழந்தை தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டாகும். இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். லாட்டரியில் திடீர் ஜாக்பாட் அடிப்பதற்கான யோகம் உண்டாகும். நாட்டு மருந்து கடை வைத்துள்ளவர்கள், தங்க வியாபாரி, வெள்ளி வியாபாரி, மருத்துவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் பெரும் புகழைப் பெறுவீர்கள். 23, 24 ஆம் தேதி எந்த விஷயத்தையும் தொடங்காமல் இருப்பது நல்லது. மிதுன ராசிக்கு அற்புதமான மாதமாக இருக்கும். உடல் தெம்பு அதிகரிக்கும். லாபம் கொட்டும். கடனை அடைப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைப்பது நிச்சயம். கடக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். செல்வ வளம் பெருகும். கடக வீட்டில் நீசபங்க ராஜயோகம் ஏற்படுவதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எது தவறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். பணம் இருப்போர் பாகப் பிரிவினைகள் போன்ற விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது. 18 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு யாருக்கும் பணம் கொடுப்பது, பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3 ஆம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். கூடப் பிறந்தவர்களால், சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பாகப் பிரிவினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. செப்படம்பர் 20 ஆம் தேதி உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். 24, 25 ஆம் தேதி அமைதியாக இருப்பது நல்லது. சொத்துகளை வாங்கும் யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நீசபங்க ராஜயோகத்தால் அரசு பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையின் அடுத்த படிநிலைக்குச் செல்லும் யோகம் உண்டு. துலாம் ராசியினருக்கு அரசு உதவிகள் இந்த மாதத்தில் கிடைக்காது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போகும். சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளார். துலாம் ராசியினருக்கு எதிரி சூரியன். தலைமைப் பதவி உங்களுக்கு கிடைக்காது. நீங்களே ஒரு சொந்த தொழில் செய்தால் மட்டுமே தலைமைப் பதவி இருக்குமே தவிர, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. விமர்சகர் பதவிக்கான அங்கீகாரம் கிடைக்காது. செவ்வாய் நீசபங்கம் ராஜயோகம் பெறுவதால் பண மழை கொட்டும். கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நன்மையைத் தரும். வீடு கட்டுவது, இடம் வாங்குவது நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். செப்டம்பர் 24 ஆம் தேதியை தவறவிடக் கூடாது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆன்டிக் பொருட்கள், விலையுயர்ந்த பொருள்களை விற்பனை செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், கேஸ்டிங் செய்பவர்களுக்கு யோகம் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உணவு விற்பனை செய்வோருக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் தரத்திற்கு கீழான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பக்குவப்பட்ட மன நிலைமைக்கு வருவது நல்லது. செவ்வாய்க்கு உரிய சத்ரு ஹோமம் செய்வது நன்மையைத் தரும்.ரிஷப ராசி பலன்
மிதுன ராசி பலன்
கடக ராசி பலன்
துலாம் ராசி பலன்