ராஜயோகம் கைகொடுக்கும் செப்டம்பர்.. துலாம், விருச்சிகம், தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

    Advertisement

    துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

    மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு அரசு உதவிகள் இந்த மாதத்தில் கிடைக்காது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போகும். சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளார். துலாம் ராசியினருக்கு எதிரி சூரியன். தலைமைப் பதவி உங்களுக்கு கிடைக்காது. நீங்களே ஒரு சொந்த தொழில் செய்தால் மட்டுமே தலைமைப் பதவி இருக்குமே தவிர, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. விமர்சகர் பதவிக்கான அங்கீகாரம் கிடைக்காது.

    Advertisement

    செவ்வாய் நீசபங்கம் ராஜயோகம் பெறுவதால் பண மழை கொட்டும். கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நன்மையைத் தரும். வீடு கட்டுவது, இடம் வாங்குவது நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். செப்டம்பர் 24 ஆம் தேதியை தவறவிடக் கூடாது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆன்டிக் பொருட்கள், விலையுயர்ந்த பொருள்களை விற்பனை செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், கேஸ்டிங் செய்பவர்களுக்கு யோகம் உண்டு.

    அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உணவு விற்பனை செய்வோருக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் தரத்திற்கு கீழான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பக்குவப்பட்ட மன நிலைமைக்கு வருவது நல்லது. செவ்வாய்க்கு உரிய சத்ரு ஹோமம் செய்வது நன்மையைத் தரும்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு நேர விரயம் ஏற்படுவதற்கான மாதமாக இருக்கும். பார்ட்னர்களை நம்பாமல் நீங்களே வேலையில் இறங்குவது நன்மை பயக்கும். மேஷம், சிம்மம், தனுசு ராசி பார்ட்னர்களால் எந்தவித நன்மைகளும் உங்களுக்கு நடக்காது. 12க்கு உரிய சுக்கிரன் ஆட்சி பெறுவதால் பார்ட்னரால் விரயங்கள் நிச்சயமாக ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாட்களாக இருந்து உடல்நலப் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.

    தொழில், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய லாபங்கள் கொட்டும். மக்கள் உங்களைத் தேடி வருவார்கள். நண்பர்களால் கிடைக்கக்கூடிய லாபங்கள் அதிகரிக்கும். யாரிடமாவது இருந்து உதவி பெற வேண்டும் அல்லது ஆதாயம் பெற வேண்டும் என்றால் 24 ஆம் தேதிக்கு முன்பு கேட்பது நல்லது. செல்வம் உங்களை வந்தடையும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மியூட்சுவல் ஃபண்ட், நிதி, பங்குச் சந்தை ஷேர், முதலீடு போன்றவற்றில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். 20 ஆம் தேதி இதுபோன்ற விஷயங்களைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும். மகான்கள் வழிபாடு, சித்தர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ஜீவசமாதிகளுக்குச் செல்வது, ராகவேந்திரர், மகரிஷி வழிபாடுகள் ஏற்றத்தைக் கொடுக்கும்.

    எதிர்பாலினத்தவரால் உங்கள் பெயர் கெடும் அபாயம் உள்ளது. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் அளவாக வைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி கூட சந்தேகப்படும் சூழல் போன்ற அமைப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டில் சிக்கிக் கொள்ளும் சூழல் உள்ளதால் அமைதியாக இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு ஹோமம் செய்வது, திருப்பாம்பரம் செல்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. யோகாதிபதி செவ்வாய் விபரீத ராஜயோகத்தை தரப் போகிறார். உங்களுடைய அறிவுதான் மிகப்பெரிய பலம். 7க்கு உரிய புதன் 10 இல் உச்சமாகி இருக்கிறார். வேலையில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். பெயர், புகழ் அதிகரிக்கும். பதவி உயர்வு, வெளிநாடு செல்வது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    அரசனைப் போல யோகம் உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். அரசியல் நிமித்தமாக அழைப்பு வந்தால் அக்டோபர் மாதம் செல்வது நல்லது. மாமனாரிடம் இருந்து பணங்கள் வந்து சேரும். தொழில் விரிவாக்கம், தொழில் செய்வதற்கு கடன்கள் கிடைக்கும். பணம் வரும் வழிகள் உங்கள் கண்ணுக்குத் தெரியும். பெண்களின் மூலமாக பணம் வந்து சேரும் யோகம் உண்டு. மனைவியின் ராசியால் முன்னேறும் யோகம் உண்டு.

    அழகு கூடும். ஸ்டேஜ் ஏறும் யோகம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, கலைஞர்களுக்கு யோகம் உண்டாகும். மீடியா எனும் பெறும் வெளிச்சம் உங்கள் மேல் படும். பிரகாசமாக மாறும் யோகம் உண்டு. பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணிச்சுமை, டென்ஷன் இருந்தாலும் யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    செப்டம்பர் 20 ஆம் தேதி வாழ்க்கையே மாறப்போகிறது. வசந்த காலம் உண்டாகும். செவ்வாய் பகவான் விபரீத ராஜயோகம் பெறுவதால் அற்புதமான யோகம் உண்டாகும். வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கேட்பது நல்லது. 7, 8, 9 ஆம் தேதி அமைதியாக இருப்பது நன்மையைத் தரும்.

    English Summary

    September 2026 horoscope highlights major career, financial, business, investment and personal developments for thulam, dhanusu, magaram natives, along with important precautions and remedies.