கிரகங்கள் கைகொடுக்கப் போகுது.. செப்டம்பரில் கடகம், சிம்மம், கன்னிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

    Advertisement

    துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

    மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    கடக ராசி பலன்

    கடக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். செல்வ வளம் பெருகும். கடக வீட்டில் நீசபங்க ராஜயோகம் ஏற்படுவதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எது தவறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். பணம் இருப்போர் பாகப் பிரிவினைகள் போன்ற விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது. 18 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு யாருக்கும் பணம் கொடுப்பது, பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3 ஆம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். கூடப் பிறந்தவர்களால், சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பாகப் பிரிவினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. செப்படம்பர் 20 ஆம் தேதி உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். 24, 25 ஆம் தேதி அமைதியாக இருப்பது நல்லது. சொத்துகளை வாங்கும் யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நீசபங்க ராஜயோகத்தால் அரசு பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையின் அடுத்த படிநிலைக்குச் செல்லும் யோகம் உண்டு.

    Advertisement

    சிம்ம ராசி பலன்

    புதிய தொழில்களை தொடங்குவது, புதிய விஷயங்களைச் செய்வதை இந்த காலகட்டத்தில் தொடங்காமல் இருப்பது நல்லது. தொழில்களில் உள்ள பிரச்சனைகள் இந்த மாதம் சரியாகாது. 20 ஆம் தேதி செவ்வாய் நீசபங்கம் ராஜயோகத்தை தருவதால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சரியாகும். அரசு ரீதியான விஷயங்களில் இருந்த டென்ஷன் தீரும். அரசு, போலீஸ், வக்கீல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    அரசு ரீதியான பென்டிங் விஷயங்கள் தீரும். சத்து குறைபாடு நீங்கும். கூடப் பிறந்தவர்களே எதிரியாக இருந்த நிலைமை எல்லாம் தீரும். ஆரோக்கியம் மேம்படும். 24 ஆம் தேதி இந்தியாவில் தொழில் தொடங்குவது ஏற்றத்தை ஏற்படுத்தும். காஸ்மெட்டிக்ஸ், அலங்காரம் செய்வது, சுற்றுலா, மகிழுந்து, டெக்கரேஷன் செய்வது, ஆண் பெண் உறவுகள் போன்றவை அற்புதமாக இருக்கும்.

    Advertisement

    அழகுக் கலையில் நிபுணத்துவம் பெறுவீர்கள். மேக்கப் தொழிலை தொடங்குவது நன்மை பயக்கும். செப்டம்பர் 20 ஆம் தேதி அரசுப் பிரச்சனை தீரும். 3 முதல் 24 ஆம் தேதி வரை புதன் பகவான் கன்னியில் உச்சம் பெறுவதால் மார்க்கெட்டி எக்ஸிகியூட்டிவ்ஸ், டிஜிட்டல் புரோமோட்டர்ஸ், பத்திரகைத் துறை, அச்சுத் துறை, வக்கீல்கள், கவுன்சிலிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் 10, 11, 26, 27. பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் நிறைய விரயம் ஏற்படுவதற்கான காலகட்டமாக இருக்கும். நிறைய பெரிய மனிதர்களின் சந்தோஷம் ஏற்படும். 12 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 3க்கு 8 க்கு உரிய செவ்வாய் பகவான் நீசபங்க ராஜயோகம் தருவதால் தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    Advertisement

    ஐடி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புகழ், அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். சுக்கிரனோடு புதனும் சேர்வதால ஞானம், கல்வி, அறிவு மேலோங்கும். 24 ஆம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர், புதிதாக கம்பியூட்டர் சென்டர் ஆரம்பிப்போர், நெட்வொர்க்கிங் படிப்போருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆர்டீபிசியல் இன்டெலிஜன்ட் படிப்பதற்கு நல்ல காலகட்டமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

    மொத்த வியாபாரம் செய்வோருக்கு அற்புதமாக இருக்கும். பேன்சி பொருட்கள், அலங்காரப் பொருட்கள், நாட்டு மருந்து பொருள்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். எந்தவொரு விஷயத்தை செய்தாலும் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்குவது ஏற்றத்தைத் தரும். அமைதியைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

    சிவப்பு நிற ஆடை அணிவது நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவம் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் தியானம் செய்வது நன்மை. செப்டம்பர் 1, 2 ஆம் தேதிகளில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.

    English Summary

    September Horoscope: September 2026 horoscope reveals major career, financial, property, health and personal developments for kadagam, simmam, kanni natives amid significant planetary transits.