பணக்கார யோகம் பெறும் தனுசு ராசி.. 3 கிரகங்களின் அருளால் வாழ்க்கையே மாறப்போகுது.. இனி ஏறுமுகம் தான்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு அட்டகாசமான மாதமாக இந்த மாதம் இருக்கும். 8 ஆம் இடத்தில் நீசபங்க ராஜயோகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருக்கின்றனர். 10 இல் உச்ச புதன், 11 இல் சுக்கிரன் அமர்ந்திருக்கும் சுபமாதமாக இருக்கும். ராசிக்கு எதிரியான சுக்கிர பகவான் 11 ஆம் இடத்தில் வரும்போது நிறைய நல்ல பலன்களைத் தருவார். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என 3 மாதங்கள் வரை சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார் என்பதால் சட்டப்பூர்வமான விஷயங்களில் சாதமான நிலைமை இருக்கும். சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

    Advertisement

    தொட்டது துலங்கும்

    தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நிலம், இடம், வரப்பு போன்ற சட்ட சிக்கல்கள், காவல் துறை தொடர்பான எல்லா பிரச்சனைகளில் வெற்றி பெறுவீர்கள். சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள். சோஷியல் மீடிய இன்ப்ளூயன்சர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிலையற்ற தன்மைகள் எல்லாம் மாறி வலிமை பெறுவீர்கள். சொந்தத் தொழில், சொந்த வியாபாரம் அமையும் யோகம் உண்டு.

    தொழிலில் ஜாக்பாட்

    ஏற்கனவே சொந்த தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகமாக இருக்கும். விவசாயிகளுக்கு அற்புதமான மாற்றங்கள் உண்டாகும். பச்சை நிறத் தொழிலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய நல்ல மாற்றம் ஏற்படும். கன்சல்டிங், அறிவுரை தொழில், சோஷியல் மீடியா என அறிவைப் பயன்படுத்தக்கூடிய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அக்கா, தங்கை, அண்ணன்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும். பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் புதிய நல்ல பலன்கள் கிடைக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    நெருப்பு, கட்டடத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நன்மைகள் ஏற்படும் காலகட்டம். தேக்கமாக இருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றங்கள் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Dhanusu sign as a result of these planetary changes.