சொந்த வீடு வாங்கனும்னு ஆசையா?.. கடக ராசிக்கு செப்டம்பரில் அடிக்குது அதிர்ஷ்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    கடகம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு செப்டம்பர் ஒரு பாதியில் செலவுகள், விரயங்கள் அதிகமாகவும், அடுத்த 15 நாட்கள் வேறு மாதிரியாகவும் செயல்படும். 12 ஆம் இடத்தில் செவ்வாய் வலுவாக முதல் 15 நாட்கள் இருக்கிறார். பிற்பகுதி 15 நாட்களுக்கு ராசியிலேயே செவ்வாய் வருகிறார். 9. 10க்கு உடையவர்கள் ஒன்றாக இணையக்கூடிய செவ்வாய் நீசபங்கத்தை அடையக்கூடிய ராஜயோகம் உண்டாகும்.

    Advertisement

    யோக பலன்

    முதல் 15 நாட்களுக்கு வருமானம் பெரிதாக இல்லை என்றாலும், பிற்பகுதி 15 நாட்கள் மிகப்பெரிய யோக பலன்களைக் கொடுக்கும். மாத ஆரம்பத்திலேயே 3 ஆம் இடத்தில் நீசமாக இருக்கக்கூடிய சுக்கிரன் 4 ஆம் இடத்திற்கு வந்து 10 ஆம் இடத்தைப் பார்க்கிறார். தொழில் நன்றாக இருக்கும், வேலை நன்றாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

    செலவுகள் வரும்

    முதல் 15 நாட்கள் சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். கட்டடம், குடியிருப்பு, வாடகைதாரர் வகையில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சட்டப்பூர்வமான போராட்டத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். இருப்பினும், செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாயின் அற்புதமான பலத்தால் நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    ஆன்மீகம்

    9 ஆம் இடத்தில் இருக்கும் சனியை குரு பார்ப்பதால் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ஆன்மீக யாத்திரை செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்கு தெய்வ தரிசனம், ஞானிகள் தரிசனம், ஞானிகள் பார்வை கிடைக்கும் பாக்கியம் ஏற்படும். பக்தியில் ஈடுபாடு அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வீடு வாங்குவதற்கு பயந்து கொண்டிருந்தவர்களுக்கு வீட்டுக் கடன் அனுமதி கிடைக்கும்.

    வீடு வாங்கும் யோகம்

    வீடு சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும். எங்கு வீடு வாங்கலாம் என்கிற தெளிவுகள் பிறக்கும். இளைஞர்களுக்கு வாகன மாற்றங்கள் ஏற்படும். அம்மாவைப் பற்றிய திருப்தியான எண்ணங்கள், அவருடைய அனுமதி, ஆசிர்வாதம் கிடைக்கும் அமைப்பு ஏற்படும். அஷ்டமத்து சனியில் பட்ட கஷ்டங்களில் இருந்து நிறைய நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள். இந்த அமைப்புகள் நீடிக்கும்.

    Advertisement

    குடும்பம் அமையும். நிம்மதி ஏற்படும். வேலை, தொழிலில் நிம்மதி உண்டாகும். நல்ல மாற்றங்கள் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Cancer (Kadagam Rasi) sign as a result of these planetary changes.