குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஜெயமாகும் இனி

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசியினருக்கு கடந்த 3 மாதமாக சில நல்ல பலன்களை அடைந்திருப்பீர்கள். முயற்சிகள் பழிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். கடவுள் உங்களைப் பார்த்து கண் திறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 3, 4 வருடத்திற்கு அற்புதமான யோகங்களைப் பெறுவீர்கள். 3 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். அவரை உச்ச குரு பார்க்கிறார்.

    Advertisement

    தர்மகர்மாதிபதி யோகம்

    பாக்கியாதிபதியாகிய உச்ச புதன் சனி பகவானைப் பார்க்கப் போகிறார். 9, 10 ஆம் அதிபதி அவரவர் வீட்டில் இருக்க தர்மகர்மாதிபதி யோகம் உருவாகிறது. ராசியையும், ராசிநாதனையும் உச்ச குரு பார்க்கிறார் என அற்புதமான கிரக நிலைகள் உள்ளன. தன்னம்பிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் காலகட்டம். எல்லா விஷயத்திலும் முக்கியமானவை நடக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது.

    கெளரவம், புகழ்

    இழந்துவிட்டோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தன்மைகளைக் கொடுக்கும். இழந்த கெளரவம், புகழ் மீண்டும் வந்து சேரும். இழந்த வேலை திரும்பக் கிடைக்கும் அமைப்பு. நல்ல தொழில் அமையும். வியாபாரம் நன்றாக இருக்கும். லட்சியங்கள் நிறைவேறும். உங்களுடைய இலக்குகளை நோக்கி ஓட ஆரம்பிப்பீர்கள். அவற்றில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.

    Advertisement

    நல்லவை

    போட்டிகள் எல்லாம் ஒழியும். கடன் பற்றிய கவலைகள் அனைத்தும் விலகும். வயசாகிவிட்டது, இவற்றை எல்லாம் செய்ய முடியாதோ என்கிற எண்ணங்கள் எல்லாம் நீங்கும். எல்லாவற்றையும் செய்ய முடியம் என்கிற நல்ல எண்ணங்கள் மேலோங்கும். எல்லாவற்றிலும் நல்லவை நடக்க ஆரம்பிக்கக்கூடிய மாதமாக வரும் 3 மாதங்கள் அமையும்.

    ஜெயம்

    எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நல்ல விதமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு நன்றாக படிப்பு வரும். தொழில் செய்பவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். கூட்டாளிகள் கைகொடுப்பார்கள். கணவன், மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். பிள்ளைகளுக்கு நீங்கள் தோல் கொடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Magaram sign as a result of these planetary changes.