மிதுன ராசிக்கு 30 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. வேலை, தொழிலில் வரப்போகும் அதிர்ஷ்டம்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு நல்ல மாதமாக இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு அமையும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் உண்டாகும். ராசியில் இருக்கும் செவ்வாய் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு 2 ஆம் இடத்தில் நீச்சபங்க ராஜயோக அமைப்பில் மிகப்பெரிய அளவில் நல்ல மாற்றத்தைக் கொடுப்பார். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் உச்சத்தை அடையக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது.

    Advertisement

    பணவரவு

    ராசியாதிபதி, யோகாதிபதியின் வலுவாலும் எப்போதுமே இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாகத் தான் இருக்கும். 2 ஆம் தேதியே சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். எல்லா கிரகங்களுமே உங்களுக்கு சாதகமான நிலைமையில் இருப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பம் சார்ந்து இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

    பொற்காலம்

    வேலை, தொழில், வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அதிகாரி மாறி உங்களுக்கு அனுசரணையான, சாதகமான நபர் அந்தப் பதவிகளுக்கு வருவார்கள். சிலருக்கு லட்சியங்கள் புலப்படும். எந்த வேலை, தொழில், வியாபாரம் செய்யலாம் என்கிற தெளிவுகள் பிறக்கும். பொற்காலமாக இருக்கும்.

    Advertisement

    குரு பார்வை

    4 ஆம் இடத்தில் புதன் உச்சம், 5 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, 2 ஆம் இடத்தில் உச்சகுரு இருப்பது மிகப்பெரிய நல்ல யோகத்தைக் கொடுக்கும். தர்மகர்மாதிபதி யோகம் மாதம் முழுக்க செயல்படும். 9 ஆம் அதிபதி 10 ஆம் இடத்தில் பார்க்கிறார். குரு அவரைப் பார்ப்பதால் யோகம் ஏற்படும். எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஒரு கூடுதல் நன்மைகள் உண்டாகும். சோஷியல் மீடியாவில் நல்ல பிரபலமாகும் அமைப்பு உள்ளது.

    முன்னேற்றம்

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலாக பிரபலமாக வேண்டும் என்று நினைப்போருக்கு பெயர், புகழ் அடையும் தன்மை உண்டாகும். வியாபாரம் செய்வோர், தொழில் முனைவோருக்கு நல்ல லாபங்கள் வரும். இரும்புத் தொழில், கட்டடத் தொழில், விவசாயம் போன்ற தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு குடும்பம் மற்றும் வெளியில் இருந்து வந்த மன அழுத்தங்கள் தீரும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Gemini (Mithunam Rasi) sign as a result of these planetary changes.