செப்டம்பர் மாத பலன்: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷப ராசி.. புதிய வேலை கன்ஃபார்ம்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் குழப்பம், தயக்கமாக இருந்திருப்பீர்கள். ராசிநாதன் 6 ஆம் இடத்திற்கு இப்போது வலிமையாக வந்திருப்பதால் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வீட்டுக் கடன், வண்டி வாகனம் கிடைக்கும் யோகம் உண்டாகும். பணம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

    Advertisement

    குரு பார்வை

    புதன் உச்சம் பெறுவதால் இளைஞர்களுக்கு லட்சியம் நிறைவேறும். எதை நோக்கிச் செல்கிறோம் என்கிற தெளிவு பிறக்கும். தம்பி, தங்கைகளால் மன வருத்தம் கொண்டவர்களுக்கு அவை நீங்கி சந்தோஷம் பிறக்கும். 80 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும். எதையும் சாதிக்கக்கூடிய தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் புனித பலன்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும் அருமையான மாதமாக இருக்கும்.

    முன்னேற்றம்

    குடும்பத் தலைவிகளுக்கு இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும். குழப்பங்கள் பரிபூரணமாக நீங்கும். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக இருந்து வந்த பிரச்சனை தீரும். வேலை, தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும், மரியாதையும் திரும்பி வரும். கெளரவத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    வெற்றி மேல் வெற்றி

    திட்டமிட்ட காரியங்களி வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். குழப்பங்கள் நீங்கி தீர்க்கமாக முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பி, முதலீட்டில் கவனம் செலுத்துவீர்கள். தைரியத்துடன் எல்லா வேலைகளையும் அணுகும் அமைப்பு ஏற்படும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Taurus (Rishabam Rasi) sign as a result of these planetary changes.