பணக்கார யோகம் பெறும் துலாம் ராசி.. சுக்கிரன் அருளால் தொட்டது துலங்கும் நேரம்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு மிகப்பெரிய விடிவு காலம் பிறக்கக்கூடிய மாதமாக இந்த செப்டம்பர் மாதம் அமையும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு தடையையும், எதிர்மறையான விஷயங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். 2 ஆம் தேதியில் இருந்தே ராசியிலேயே ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி அடைகிறார். 9 இல் இருக்கம் செவ்வாய் 10 ஆம் இடத்திற்கு வருகிறார். செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் குருவுடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.

    Advertisement

    முன்னேற்றம்

    2 ஆம் அதிபதி 10 ஆம் வீட்டில் இருப்பது பணத்திற்கு அடித்தளமிடக்கூடிய காலகட்டமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த மாதத்தில் அந்தஸ்து, கெளரவம், மதிப்பை இழந்தவர்கள் அவை அனைத்தையும் மீட்டெடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். கெளரவம், மதிப்பு, மரியாதை கூடும். பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும்.

    யோகம்

    பெண்களுக்கு சிறப்பு நன்மைகள் ஏற்படும். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு பெறும் யோகம் உண்டு. இளம்பெண்கள் மேற்படிப்பு படிக்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலையில் இதுவரை இல்லாத நிலைமைகளுக்குச் செல்வீர்கள். ஆண்களால் அனுபவித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். ஆண்களை விட புத்திசாலிகள் என்பதை நிரூபிக்கக்கூடிய மாதமாக இருக்கும்.

    Advertisement

    திருமண யோகம்

    தொட்டது துலங்கும். எதையும் திறம்பட முடிவெடுப்பீர்கள். இரண்டாவது திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். ராசியில் சுக்கிரன் அமர்ந்து 7 ஆம் இடத்தை பார்ப்பதாலும், 7 ஆம் அதிபதி நீசபங்க ராஜயோகத்தில் வலிமையாக இருப்பதாலும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகளுக்கு மாதத்தின் ஆரம்பத்திலேயே பெரிய அளவுக்கு லாபங்கள் ஏற்படும். செம்மண் விவசாயம் செய்வோருக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.

    பண வரவு

    எல்லா விஷயத்திலும் நன்மைகள் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். வியாபாரம் நன்றா இருக்கும். அண்ணன் தம்பி உறவு செழிப்பாக இருக்கும். பெற்றோர் பெரியோர் விஷயத்தில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டங்களும், முன்னேற்றமும் நிறைந்த மாதமாக இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு அமையும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    English Summary

    September matha palan: Significant planetary transits are set to occur in September. In this astrological article, we will explore in detail the effects, remedial measures, and deities to be worshipped by individuals belonging to the Libra (Thulam Rasi) sign as a result of these planetary changes.