செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்கு கிடைக்கும பலன்கள் குறித்து பார்க்கலாம். கடக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். செல்வ வளம் பெருகும். கடக வீட்டில் நீசபங்க ராஜயோகம் ஏற்படுவதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எது தவறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகளை இந்த செப்டம்பர் காலகட்டத்தில் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். பணம் இருப்போர் பாகப் பிரிவினைகள் போன்ற விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தனாதிபதியான சூரிய பகவான் ஆட்சி பெற்றிருந்தார். இப்போது கன்னி ராசிக்கு சென்றுள்ளார். முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது. 18 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு யாருக்கும் பணம் கொடுப்பது, பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3 ஆம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். கூடப் பிறந்தவர்களால், சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 3, 12க்கு உடைய புதன் பகவான் உச்சமாகும் போது பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பாகப் பிரிவினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. செவ்வாயின் தரிசனத்தைப் பார்ப்பீர்கள். செவ்வாய் பகவான், முருகர் பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தைப் பெறுவீர்கள். செவ்வாய் நீச்சம் பெற்றும், உச்சம் பெற்ற குருவுடன் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் பெற்று, தனது சொந்த வீடான விருச்சிக வீட்டைப் பார்ப்பதால் அற்புதமான யோகம் ஏற்படும். செப்படம்பர் 20 ஆம் தேதி உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இந்த தினத்தில் முருகன் வழிபாடு நன்மையைத் தரும். 24 ஆம் தேதி சுக்கிரன் புதனோடு சேர்ந்து துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார். அந்த நாளில் தோல், பல், கண், முடி, கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்வோர் அதனைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற சிகிச்சைகளை 24 ஆம் தேதிக்கு முன்பு செய்வது நன்மை பயக்கும். அலங்காரப்படுத்துகின்ற விஷயங்களைச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வைர வியாபாரிகள் இந்த நாட்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. 2 ஆம் இடத்தில் கேது இருப்பது பணத்தை தடுக்கும் என்பதால் கடக ராசியினர வீட்டில் மங்கள வாத்தியம் கேட்பது முன்னேற்றத்தைத் தரும். சுமங்கலிங்களுக்கு பூஜை செய்வது நன்மை தரும். திருமணமாகாத பெண்களுக்கு புடவை, வளையல் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து திருமணத்துக்கு உதவுவது ஏற்றத்தைத் தரும். குழந்தைகளை அலங்காரம் செய்து, அவர்களுக்கு இனிப்பு வாங்கிக் கொடுப்பது நன்மை தரும். 24, 25 ஆம் தேதி அமைதியாக இருப்பது நல்லது. சொத்துகளை வாங்கும் யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நீசபங்க ராஜயோகத்தால் அரசு பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையின் அடுத்த படிநிலைக்குச் செல்லும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.கடக ராசி பலன்
கவனம்
யோகம்
நல்ல நேரம்
பரிகாரம்
சொத்துகள் சேரும்