செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும பலன்கள் குறித்து பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் புதன் பகவான் ராசிநாதன் உச்சமாகிறார். நிறைய விரயம் ஏற்படுவதற்கான காலகட்டமாக இருக்கும். நிறைய பெரிய மனிதர்களின் சந்தோஷம் ஏற்படும். பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு செலவு ஏற்படும். 12 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 3க்கு 8 க்கு உரிய செவ்வாய் பகவான் நீசபங்க ராஜயோகம் தருவதால் தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். சுக்கிர பகவான் 24 ஆம் தேதி ஆட்சி பெறுகிறார். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புகழ், அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். சுக்கிரனோடு புதனும் சேர்வதால ஞானம், கல்வி, அறிவு மேலோங்கும். 24 ஆம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர், புதிதாக கம்பியூட்டர் சென்டர் ஆரம்பிப்போர், நெட்வொர்க்கிங் படிப்போருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆர்டீபிசியல் இன்டெலிஜன்ட் படிப்பதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் நிறைய நல்ல யோகங்களைத் தரப் போகிறார். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதன் உடன் இருப்பதால் மொத்த வியாபாரம் செய்வோருக்கு அற்புதமாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களான பேன்சி பொருட்கள், அலங்காரப் பொருட்கள், நாட்டு மருந்து பொருள்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்வோருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்தவொரு விஷயத்தை செய்தாலும் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்குவது ஏற்றத்தைத் தரும். செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்தில் விபரீத ராஜயோகம் பெறுவதால் அமைதியைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். புதன் 2 ஆம் இடத்துக்குப் போவது மகிழ்ச்சியையும், தைரியத்தையும் ஏற்படுத்தும். பதவிக்காக செலவு செய்வீர்கள். தான் எனும் எண்ணம் மேலோங்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சிவப்பு நிற ஆடை அணிவது நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவம் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் தியானம் செய்வது நன்மை. செப்டம்பர் 1, 2 ஆம் தேதிகளில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.கன்னி ராசி பலன்
தடைகள் நீங்கும்
வெளிநாடு யோகம்
தொழில்
வழிபாடு