“பண மழை கொட்டும்”.. மீனம் ராசிக்கு செப்டம்பரில் சொத்து சேரும் யோகம்.. எச்சரிக்கை தேவை

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மீனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

    Advertisement

    துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

    மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினர் செப்டம்பர் மாதத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. மனைவி, மனைவி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவோர் காசு கொடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்ட்னர்களிடம் பணம் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    பண வரவு

    3, 8 க்கு உரிய சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் பெண்ணினால் ஆபத்து வருவதற்கான பாதிப்புள்ளது. 12 இல் ராகு இருப்பதால் வீண் வதந்தி ஏற்படும். பெண்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மீறி பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. 2க்கு உடைய செவ்வாய் பகவான் நீச்சமடைந்து, நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பண மழை கொட்டும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    வழிபாடு

    இந்த மாதம் மீன ராசியினருக்கு சந்திர மங்கள யோகம் இருப்பதால், அது குரு மங்கள யோகமாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் அம்மா, குரு, செவ்வாய் முக்கியம். பார்வதி, முருகர், குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த ஒரு மாதம் தேவையில்லாத பழக்க வழக்கங்களைத் தவிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    கவனம்

    6க்கு உடைய சூரிய பகவான் கடந்த ஒரு மாதமாக ஆரோக்கியத்தில் பிரச்சனையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சூரியன் 7க்கு செல்வதால் மனைவி பெயரில் பெரிய முயற்சிகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணம், பொருள்கள் போன்றவற்றை மனைவியிடம் கொடுத்தால் அவை காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 20 ஆம் தேதிக்கு மேல் செய்து கொள்வது நன்மை.

    முன்னேற்றம்

    8 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். 7க்கு உடைய புதனோடு சேர்வதால் கண்டிப்பாக சொத்து வாங்கும் அமைப்பு ஏற்படும். இருப்பினும், வம்பு, வழக்குகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 24 ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் பகவானின் அருளால் பணப் பிரச்சனைகள் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும். தூக்கம் கெடும் அமைப்புள்ளதால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    பரிகாரம்

    ராகு பகவானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். திருநாகேஸ்வரம், திருவேற்காடு கருமாரியம்மன் சென்று வருவது நன்மை. மனதில் இருக்கும் ஆணவம் போன்றவற்றை உதரித் தள்ளுவது நல்லது. தியானம், யோகம் நன்மை பயக்கும். பெளர்ணமியன்று சந்திரனை தரிசனம் செய்வது ஏற்றததைத் தரும். மாற்று மதத்தினருக்கு உதவி செய்வது நன்மை. 14, 15, 19, 28, 29 ஆகிய நாட்களில் அமைதியாக இருக்க வேண்டும்.

    English Summary

    Meenam rasi people may experience promising property gains, financial opportunities, family happiness and improved health in September 2026, while caution is advised against major loans.