செப்டம்பர் மாத பலன்: ரிஷப ராசிக்கு பதவி உயர்வு, பணவரவு.. இந்த தேதிகளில் மட்டும் உஷார்

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

    Advertisement

    துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்யா யோகம் உருவாகிறது.

    மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    ரிஷப ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு 3 ஆம் தேதி புதன் பகவான் உச்சமாகிறார். சுக்கிர பகவான் ஆட்சி பெறப் போகிறார். விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்போருக்கு இந்த காலகட்டத்தில் விவாகரத்து கிடையாது. பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

    Advertisement

    குடும்பம்

    கணவன், மனைவி, காதலன், காதலியுடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு ஒன்று சேருவீர்கள். இந்த மாதம் வரும் கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று வழிபாடு செய்வது பதவி உயர்வில் இருந்து வந்த தடைகளை விலகிச் செல்லும்.

    முன்னேற்றம்

    வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்வோருக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். நல்ல திருமண வரன்கள் கிடைக்கும். 4க்கு உரிய சூரியன் 5 ஆம் இடத்திற்கு வருவதால் பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும்.

    Advertisement

    பதவி உயர்வு

    நீங்கள் இருந்த நிறுவனத்திலேயே பெரும் பதவிகள் வந்து சேரும். பெண்கள் அழுகு, தோல், காஸ்மெட்டிக் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் கணவர் உங்களுடைய பெயரில் முதலீடு செய்வது, நல்ல விஷயங்களைத் தொடங்குவது போன்றவற்றை செய்வது நல்லது. சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    வழிபாடு

    சுக்கிர பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். அங்கு புதனும் சேர்ந்திருக்கிறார். சுக்கிர ஓரையில் புதன் புத்தியில் அருகில் இருக்கும் லட்சுமி கோயிலில் வழிபாடு செய்வது நல்லது. அல்லது பெருமாள் கோயிலில் தாயாருக்கு குங்குமார்ச்சனை செய்வது சகலவித முன்னேற்றங்களைத் தரும். சர்வ தாரித்ரிய துவம்சின்யே நமஹ என்ற மந்திரத்தை தினந்தோறும் சொல்லி வருவது ஏற்றத்தைத் தரும். 20, 21, 22 ஆம் தேதிகளில் புதிய விஷயங்களை செய்வது, செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    English Summary

    Rishabam rasi people may experience promising property gains, financial opportunities, family happiness and improved health in September 2026, while caution is advised against major loans.