சிம்ம ராசியினரே செப்டம்பரில் தீரும் பிரச்சனைகள்.. தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு

  • செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

    Advertisement

    துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

    மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்கு கிடைக்கும பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    சிம்ம ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு ஆகஸ்ட் மாதத்தில் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதனால், மாதம் முழுவதும் டென்ஷனாக இருந்திருப்பீர்கள். புதிய தொழில்களை தொடங்குவது, புதிய விஷயங்களைச் செய்வதை இந்த காலகட்டத்தில் தொடங்காமல் இருப்பது நல்லது. தொழில்களில் உள்ள பிரச்சனைகள் இந்த மாதம் சரியாகாது.

    Advertisement

    நீசபங்க ராஜயோகம்

    2க்கு உடைய புதன் பகவான் 3 இல் மறைகிறார். தனாதிபதி துலாமில் மறைவதால் சுழற்சி செய்வதற்கான பணம் கையில் இருக்காது. 4, 9க்கு உடைய பாதகாதிபதியான செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகளைத் தரப் போகிறார். 20 ஆம் தேதி செவ்வாய் நீசபங்கம் ராஜயோகத்தை தருவதால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சரியாகும். அரசு ரீதியான விஷயங்களில் இருந்த டென்ஷன் தீரும். அரசு, போலீஸ், வக்கீல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    தொழில்

    அரசு ரீதியான பென்டிங் விஷயங்கள் தீரும். சத்து குறைபாடு நீங்கும். கூடப் பிறந்தவர்களே எதிரியாக இருந்த நிலைமை எல்லாம் தீரும். ஆரோக்கியம் மேம்படும். 24 ஆம் தேதி இந்தியாவில் தொழில் தொடங்குவது ஏற்றத்தை ஏற்படுத்தும். காஸ்மெட்டிக்ஸ், அலங்காரம் செய்வது, சுற்றுலா, மகிழுந்து, டெக்கரேஷன் செய்வது, ஆண் பெண் உறவுகள் போன்றவை அற்புதமாக இருக்கும்.

    Advertisement

    அழகுக் கலை

    3, 10க்கு உடைய சுக்கிர பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். சிம்ம ராசி பெண்களுக்கு தனக்கான அடையாளங்கள் கிடைக்கும். கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 2க்கு உடைய சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் போது அழகுக் கலையில் நிபுணத்துவம் பெறுவீர்கள். மேக்கப் தொழிலை தொடங்குவது நன்மை பயக்கும்.

    தொழில்

    செப்டம்பர் 20 ஆம் தேதி அரசுப் பிரச்சனை தீரும். 18 ஆம் தேதி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 3 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை புதன் பகவான் கன்னியில் உச்சம் பெறுவதால் மார்க்கெட்டி எக்ஸிகியூட்டிவ்ஸ், டிஜிட்டல் புரோமோட்டர்ஸ், பத்திரகைத் துறை, அச்சுத் துறை, வக்கீல்கள், கவுன்சிலிங் துறையில் இருப்பவர்கள் போன்றோருக்கு அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    பரிகாரம்

    உங்களுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாக புதனுக்குரிய பச்சைப்பயிறை சுண்டல் செய்து பறவைகளுக்கு தானமாக கொடுப்பது நல்லது. மாணவர்களுக்கு பேனா, புத்தகம் வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் 10, 11, 26, 27. பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.

    English Summary

    Simmam rasi people may experience promising property gains, financial opportunities, family happiness and improved health in September 2026, while caution is advised against major loans.