செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்கு கிடைக்கும பலன்கள் குறித்து பார்க்கலாம். மிதுன ராசியினருக்கு நீங்கள் செய்யும் முயற்சிகளில் இந்த மாதம் தடைபடும் என்பதால் அடுத்த மாதம் முயற்சி செய்வது நன்மை பயக்கும். பதவி உயர்வு இந்த மாதம் கிடைக்கும். 4 ஆம் இடத்தில் 3க்கு உரிய சூரியன் 18 ஆம் தேதி வருவதால் அதற்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்காது. 2 ஆம் இடத்தில் இருக்கும் குரு நிறைய பண வரவைக் கொடுப்பார். ராசிநாதன் 5 ஆம் இடத்தில் செல்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. கடனை அடைப்பதற்கான யோகம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கிய பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. விட்டுவிட்ட தேவையில்லாத பழக்கவழக்கத்தை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது மேன்மையைத் தரும். 24 ஆம் தேதி சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். இந்த தினம் உங்களுக்கு குழந்தை தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டாகும். இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். லாட்டரியில் திடீர் ஜாக்பாட் அடிப்பதற்கான யோகம் உண்டாகும். நாட்டு மருந்து கடை வைத்துள்ளவர்கள், தங்க வியாபாரி, வெள்ளி வியாபாரி, மருத்துவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் பெரும் புகழைப் பெறுவீர்கள். சஹஸ்ஹர நாம பாராயணத்தை செய்வது நன்மை பயக்கும். கோவிந்த நாம சங்கீர்த்தனம், அம்பாள் மந்திரங்களை கேட்பது நல்லது. பச்சை மகரதக் கல் போடுவது நல்லது. விஷ்ணு சஹஸ்ஹர நாம ஹோமம் செய்வது நன்மை பயக்கும். 23, 24 ஆம் தேதி எந்த விஷயத்தையும் தொடங்காமல் இருப்பது நல்லது. மிதுன ராசிக்கு அற்புதமான மாதமாக இருக்கும். உடல் தெம்பு அதிகரிக்கும். லாபம் கொட்டும். கடனை அடைப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைப்பது நிச்சயம்.மிதுன ராசி பலன்
ஆரோக்கியம்
குழந்தை பாக்கியம்
வழிபாடு