சிம்ம ராசிக்கு பொற்காலம் தொடங்கியது.. வீடு, திருமணம், குழந்தை பாக்கியம் என குவியும் யோகம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க உத்தியோகம், அரசாங்க சீட் கிடைக்கும். நிறைய மன குழப்பங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.

    Advertisement

    எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். பகை உணர்வுகள் தீரும். டிசம்பர் மாதமாக குரு பகவான் அதிசாரமாக வருவதால் சுபவிரயம் ஏற்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சுப விரயங்கள் ஏற்படும். சனி வக்கிரமாக இருக்கும்போது செலவுகளை செய்யாமல் இருப்பது நல்லது. விரயத்தில் குரு இருப்பதால் சுப விரயங்களைச் செய்வீர்கள்.

    சொந்த வீடு யோகம்

    நிறைய பேர் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு செய்வது வீட்டில் சுபிக்ஷத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    துணைக்கு துணை நிற்பது நன்மை பயக்கும். தெய்வ வழிபாடுகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் பொறுமையாக இருப்பது நல்லது. கையெழுத்திடுவதற்கு முன்பு படித்துப் பார்த்துவிட்டு போடுவது நன்மை பயக்கும்.

    அனுகூலம்

    உறவுகளுக்கு யார் என்ன பேசினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோர்களுக்கு அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி ஏற்படும். நம்பிக்கை நிறைந்த காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். கண், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கழுத்து பகுதிக்கு உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the simmam rasi people during this week of August 24 to 30.