ஆட்டத்தை ஆரம்பிக்கும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது


  • Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் **சிம்ம ராசியினருக்கு** கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு உத்தியோகம் ரீதியாக ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் என நம்பி ஏமாறாமல் உங்களுக்கானவர்களை மட்டும் நம்புவது நல்லது. யார் எதை சொன்னாலும் உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மை தரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    சங்கடங்கள் தீரும்

    30 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம்.

    தொழில்

    விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். காதல் திருமண யோகம் உண்டாகும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். விவாகரத்துக்கு அப்ளை செய்த பெண்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் நிறைய அலைச்சல், மாற்றம், டென்ஷன் உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன், சூரியன் வக்கிரமாக இருப்பது அரசு சார்ந்த துறைகள், பத்திரிகைத் துறைகள், பத்திரப் பதிவுத் துறையில், டாக்குமென்டேஷனில் பிழைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Simmam (சிம்மம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Leo (Simmam) sign during this week from July 6 to 12.