Simmam: சிகரம் தொடும் சிம்ம ராசி.. பண வரவு சூப்பர்.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று ஆடிகிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது திருமணப் பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு சூரியன் ராசிநாதன் வலுவாக இருக்கிறார். ராசியிலேயே கேது இருப்பதால் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும். அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வதற்கான எண்ணங்கள், ஆசைகள் வந்து சேரும். தங்களுக்குள் புதைந்து கிடந்த திறமைகளை வெளிக்கொண்டு வருவது, புதிதாக ஏதாவது முயற்சி செய்வது போன்றவற்றை செய்வீர்கள். புதிதாக என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.

    Advertisement

    முன்னேற்றம்

    பிஹெச்டி முடிப்பதற்கான யோகம் உண்டு. மெடிட்டேஷன், யோக போன்றவற்றை செய்வீர்கள். ஆசிரியர் பணிகளில் இருப்பவர்களுக்கு அதில் ஒரு முன்னேற்றம் ஏற்படும். ஹெச்ஆர், ஐடி துறைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தோள் பட்டை வலி, முட்டி வலி போன்றவை இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அஷ்டமசனியை உச்சகுரு பார்ப்பதால் அதன் தாக்கம் குறையும்.

    ஆரோக்கியம்

    குருவும், சனியும் இணைவதால் ஜாயிண்டுகளில் வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். பெரிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். கணவர் உங்களுக்கு சிறு சிறு எரிச்சலைத் தருவார்கள்.

    Advertisement

    கோபம் வேண்டாம்

    கணவரிடம் ஒரு மந்தத் தன்மை இருந்து கொண்டே இருக்கும். அவர்களிடம் கத்துவது, சண்டை போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோபப்படுவதை சிம்ம ராசி பெண்கள் தவிர்ப்பது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுப்பதால் திரும்பி வராத தன்மைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    பணவரவு

    பண வரவு நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டு. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் நல்லெண்ணெய் கொடுத்து சிவன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மையைத் தரும். சிவப்பு நிறம் நல்லது. கோதுமையை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. அல்லது கோதுமை தானம் செய்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Simmam (Leo) sign during the month of August.