ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.
இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது. தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். சிம்ம ராசியினருக்கு இதுவரை வெற்றி ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் தற்போது 12 ஆம் இடத்திற்கு மாறியுள்ளார். விரயம், எதிரிகளை குறிக்கக்கூடிய இடத்திற்கு மாறியுள்ளார். பூர நட்சத்திரத்தில் மன உளைச்சல்கள் வருவதற்கான காலகட்டமாக இருக்கும். மகம் நட்சத்திரத்தினருக்கு ஏப்ரல், மே மாதம் வரையுமே நல்ல நிலைமை இல்லாத சூழல் இருந்திருக்கும். இனி வரும் காலத்தில் பெரிய கஷ்டங்கள், பாதிப்புகள் எதுவும் வராது. எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய மனநிலை உண்டாகும். அஷ்டமசனி உங்கள் ராசிக்கு பெரிய சிரமங்களைத் தரப்போவதில்லை. எந்தவொரு சூழ்நிலையிலும் எல்லா காரியங்களையும் சமாளிக்கும் வகையில் இந்த அஷ்டம சனி உங்களுக்கு அமைந்திருக்கிறது. சனி பகவானை குரு பார்ப்பதால் பெரிய பாதிப்புகள் வராது. தைரியம் உண்டாகும். கடன் சார்ந்த, நோய், எதிர்ப்பு, போட்டி சார்ந்த விஷயங்களில் எல்லாம் சமாளிக்கக்கூடிய மாதமாக இருக்கும். அப்பா, அம்மாவின் மேல் இருந்து வந்த மனக்கவலைகள் நீங்கும். சொந்த ஊர் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கஷ்டங்கள், கவலைகள் நீங்கும். கும்பாபிஷேகம், சுப காரியங்கள், பொது காரியங்கள், பாகப்பிரிவினைகளில் என இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு பனிபோல விலகும். 11 ஆம் இடத்திற்கு ராசிநாதன் சூரியன் வருவதால் மன அழுத்தம் நீங்கி தெம்படைவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது, மருத்துவச் செலவுகள் உண்டாவது போன்ற நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக அகலகால் வைக்காமல் இருப்பது நன்மை பயக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டு செய்வது நன்மை பயக்கும். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.சிம்மம்
அஷ்டமசனி
குரு பார்வை
மன அழுத்தம் நீங்கும்
பொறுமை அவசியம்