ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.
இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது. தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் 9, 10 ஆம் இடங்களில் உங்களுடைய ராசிநாதன் வலிமையாக இருக்கிறார். பாக்கியாதிபதியும் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதம் முழுவதும் 6 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ராசிக்கு சுக்கிரன், சனி, புதன் நல்ல நிலையில் இருப்பதால் பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஆசிரியர்கள், வங்கித் துறை, வக்கீல் துறை, பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் இருக்கும். மனைவி, கணவரால் நல்ல லாபங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இரட்டிப்பு வருமானம் எதிர்பார்ப்பவர்கள், மனைவியின் பணி அழுத்தம், முன்னேற்றம், சம்பள உயர்வு, இடமாற்றம் குறித்து முயற்சிகள் செய்யும் ஆண்களுக்கு பெரிய சிறப்பான நன்மைகள் ஏற்படும். காதல் கைகூடும் யோகம் உண்டு. கணவன், மனைவி அடையாளம் காட்டக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பிரிந்துவிடலாம் என்று நினைத்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். இரண்டாம் வாழ்க்கை எதிர்பார்த்துக் காத்திருக்கும் துலாம் ராசியினருக்கு நல்ல வரன்கள் அமையும் காலகட்டம். 9 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் நிறைய நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். நல்ல பள்ளி, கல்லூரி, வேலை, நல்ல கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பம், ஆரோக்கியம், பொருளாதாரம் அமைவதற்கான யோகமான காலகட்டமாக இருக்கும். வயதிற்கேற்ப உங்களுக்கு சந்தோஷங்களும், நன்மைகளும், மாற்றமும் முன்னேற்றமும் அமையக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதல் 20 நாட்கள் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் கோபம் தலைக்கேறும் காலகட்டமாக இருக்கும். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்யாமல் இருப்பது நல்லது. பெரிய அளவில் கெடுதல்கள் ஏற்படாது. கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.துலாம்
லாபம் கிடைக்கும்
காதல் கைகூடும்
மாற்றம், முன்னேற்றம்
கவனம்