தூக்கிவிடும் குரு பகவான்.. துலாம் ராசிக்கு உத்யோகத்தில் வரப்போகும் சூப்பர் மாற்றம்


  • Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசி துலாம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரம் அதிக யோக பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி, குடும்பம் எல்லாவற்றிலும் நன்மைகள் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் உண்டு. உத்யோகம், தொழிலில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக ஆடி மாதத்தில் நிறைவேறும். தெளிவாக திட்டமிட்டால் எல்லாவற்றிலும் ஜெயம் தான்.

    Advertisement

    வியாபாராத்தில் அணுகூலன்கள் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பிறக்கும். அசையும், அசையா சொத்து சேர்க்கை உண்டு. வீடு, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும் குரு 10வது இடத்தில் இருப்பதால் உத்யோக மாற்றம் உண்டு. சனி திரிகோணத்தில் இருப்பதால் நல்ல வேலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. 15 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது பகவான்கள் உள்ளனர். தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் , வெளிநாடு பயன்கள் உண்டாகும்.

    Advertisement

    கால் வலி, முதுகு வலி, ஜீரண கோளாறு போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணை பற்றி யார் என்ன கூறினாலும் செவி சாய்க்காமல் கடந்து செல்வது நல்லது. பெண் நண்பர்களிடம் சற்று விலகியிருப்பது நல்லது. யாரை நம்பியும் கடன் தர வேண்டாம். அஷ்டமத்தில் செவ்வாய், சந்திரன் இருக்கிறார்கள். விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    தேவையில்லாத கோபம், பதற்றம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையுடன் அணுக வேண்டாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு, முருகன் வழிபாடு, சுப்ரமண்ய புஜங்கம் கேட்பது தீமைகளை குறைத்து, நன்மைகள் ஏற்பட உதவியாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Thulam (துலாம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Libra (Thulam) sign during this week from July 6 to 12.