Rasi palan this week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. துலாம் ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசி யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். ஆடைகள், நகை வாங்கும் அமைப்பு ஏற்படும். துணைக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    லாபம் கொட்டும்

    லாபம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். சந்தோஷமும், மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். முதலீடுகளைச் செய்வதற்கான நல்ல அமைப்பு உள்ளது. லாப ஸ்தானத்தில் சூரிய பகவான், கேது இருப்பதால் பேராசிரியர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். அதன் மூலம் உங்கள் கெளரவம் அதிகரிக்கும்.

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பததில் மகிழ்ச்சி பெருகும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கி ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும். பெயர், புகழ், கெளரவம் பெருகக்கூடிய நல்ல காலகட்டம்.

    Advertisement

    ஆரோக்கியம்

    தொழில் ஸ்தானம் விருத்தி அடையும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றியடையும் யோகம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சர்க்கை, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத பகைகள் நண்பர்களுடன் வருவது, நிலத் தகராறு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது,

    வழிபாடு

    சரியாக திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றியை சந்திப்பீர்கள். சனி வக்கிரமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட பழக்க வழக்கங்களில் இருந்து தள்ளி இருப்பது நன்மை பயக்கும். அலர்ஜி, முதுகு தண்டுவட கோளாறு விஷயத்தில் கவனம் தேவை. நவக்கிரகத்தில் இருக்கும் குரு, துர்க்கை, நரசிம்மர் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Thulam rasi people during this week of August 17 to 23.