Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். விருச்சிகம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்க்காத பண வரவு உண்டாகும். விருச்சிக ராசியினர் உள்ள வீட்டில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். சுப காரியங்களில் அதீதமான ஏற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். புதிய முயற்சிகள் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களை தவிர்த்துக் கொள்வது நன்மையைத் தரும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், மன மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. முன்னோர்களின் சொத்துகள் வந்து சேரும். வெளியூரில் குடியுரிமை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தான தர்மங்கள் செய்யும் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் மூலமாக கிடைக்கும் ஆதரவு சாதகமான நிலைமைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டம் யோக பலத்தை தரும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான அமைப்பு உண்டாகும். நல்ல நேரத்தில் எல்லா விஷயங்களையும் முன்னெடுத்து செய்து வெற்றி பெறுவது நல்லது. யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்த்து செயலில் இறங்குவது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்மையை ஏற்படுத்தும். ஜனார்த்தனன் வழிபாடு சகலவித முன்னேற்றத்தைக் கொடுக்கும்.விருச்சிகம் ராசி பலன்
யோக பலன்
புது தொழில்
அதிர்ஷ்டம்
அனுகூலம்