விருச்சிக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிக ராசி தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். ஜூன் மாதம் வரை குரு பார்வையில் இருப்பதால் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

    Advertisement

    முன்னேற்றம்

    வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைக்காத விஷயங்கள் கூட நடக்கும் காலகட்டம். மகிழ்ச்சி பெருகும் நல்ல காலகட்டம். நினைத்து பார்க்காத அளவுக்கு நன்மைகள் உண்டாகும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், புதிய படிப்புகளை ஆரம்பிக்க அற்புதமான காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

    வெளிநாடு யோகம்

    பாக்கிய ஸ்தானம் சிறப்படைவதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய வேலைகள் கிடைக்கும். பேராசிரியராகும் யோகம் உண்டாகும். நல்ல குடும்பம் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய லோன்கள் கிடைக்கும். 10 ஆம் இடம் சிறப்பாக இருப்பதால் வேலை, தொழிலில் கெளரவம் உண்டாகும். பெரிய இடத்திற்குச் சென்று அமர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

    Advertisement

    கவனம்

    எல்லா விஷயத்திலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் நண்பர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல அமைப்பு. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும்.

    வழிபாடு

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கக்கூடிய நல்ல காலகட்டம்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Viruchigam rasi people during this week of August 19 to 23.