Kumbam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு கணவன், மனைவி விஷயத்தில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். யோக பலத்தை அதிகளவில் பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது மேன்மையைத் தரும். நீண்ட நாட்களாக தொழில், உத்தியோகம், மற்ற இடங்களில் 60 வயதைக் கடந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிறியவர்கள் மூலமாக கேலி, ஏளனமும் ஏற்பட்டுவிடும் வாய்ப்புள்ளது. எந்த சூழ்நிலையிலும் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். மன வாழ்க்கை சிக்கல் இல்லாமல் நடக்கும். மண வாழ்க்கை நன்றாக இருக்கும். நிறைய பிரச்சனைகள் வந்து ஓயக்கூடிய காலகட்டம். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். குடும்பம் அமையும். பெரிய யோகம் ஏற்படும் காலகட்டம். விட்டுக் கொடுத்துச் செல்வது ஏற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சளி பிடிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துகள் வாங்குவது, கார் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம், காதல் திருமணத்திற்கான யோகம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களை செய்யும்போது கவனம் தேவை, எடுத்த காரியங்களில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது அனுகூலத்தைத் தரும். நவக்கிரகங்களில் உள்ள ராகு கேதுவுக்கு விளக்கேற்றுவது நன்மை பயக்கும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும்.கும்ப ராசி பலன் (Kumbam Rasi Palan)
கோபம் வேண்டாம்
அனுகூலம்
சொத்துகள்
வழிபாடு