Simmam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். சிம்ம ராசியினருக்கு அதிகளவிலான யோகங்கள் கிடைக்கும் காலகட்டம். எல்லா சங்கடங்களும் பரிபூரணமாக நீங்கும். 36 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பழக்கவழக்கத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உறவுகள், நட்டை இழந்துவிட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகும் அமைப்புள்ளதால் கவனம் தேவை. வரும் ஓராண்டுக்கு உறவுகள், நடப்புகளுக்குள் விரிசல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்த தொந்தரவுகள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, அரசமைப்பு, புதிய விஷயங்களில் வெற்றிக் கொடி கட்டும் காலகட்டம். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். லாபங்கள் கொட்டக் கூடிய காலகட்டம். சந்தோஷமும், வெற்றியும் உண்டாகும். குடும்பம் அமையும். காதல் திருமணம் செய்து கொள்வீர்கள். நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளியில் வரும் காலகட்டம். நல்ல மணமகள் கிடைப்பார். பணவரவு நன்றாக இருக்கும். கையிருப்பு பணம் எப்போது இருந்து கொண்டே இருக்கும். வேலையில் நிறைய அழுத்தம் ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. நிலபுலன்கள், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். விவகாரத்து வழக்கு நடப்பவர்கள் பிரியக்கூடிய வாய்ப்பு, வீட்டில் தீவிபத்து ஏற்படுவது, கால் முட்டியில் பிரச்சனைகள் வருவது போன்ற பாதிப்புகள் ஏற்படும், சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். சுப்பிரமணியர் வழிபாடு அனைத்து விதமான ஏற்றத்தையும் கொடுக்கும்.சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
வெற்றி
லாபம் அதிகரிக்கும்
வழிபாடு