Viruchigam: விருச்சிக ராசிக்கு தவிடுபொடியாகும் தடைகள்.. புதிய பொறுப்புகள் ஆன் தி வே


  • Viruchigam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

    அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

    விருச்சிக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திருமணத் தடை, குழந்தை பாக்கிய தடை, தொழில் தடை, உத்தியோக தடை, வாகன தடை, வியாபார தடை என அனைத்து விதமான தடைகளும் பரிபூரணமாக நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.

    வழிபாடு

    உறவுமுறையில் இருந்த சிக்கல் தீரும். பெரிய அளவுக்கு நம்பிக்கை ஏற்படும். எல்லா விதமான ஏற்றங்களும் ஏற்படும். அலர்ஜி, தொற்று நோய் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. அடிவயிறு, கழிவுப் பாதையில் அதீத கவனம் தேவை. தந்தை, தாயுடனான சிறிய வாக்குவாதம் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது யோகத்தைத் தரும். முருகரை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    மனைவியுடன் சண்டை ஏற்படும். அவரது உடல்நிலையில் கவனம் தேவை. அஷ்டமத்தில் குரு, புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பதால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். தேவையில்லாத இன்னல்கல், சிக்கல்கள் தீரும். தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பார்ட்னர்ஷிப் தொழில் ஆரம்பிப்பீர்கள்.

    புதிய பொறுப்பு

    படபடப்பு, டென்ஷன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் ஏற்றத்தை தரும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வேலைப்பளு அதிகரிக்கலாம், ஆனால் உங்க திறமை வெளிப்படும். புதிய பொறுப்புகள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.

    Advertisement

    பொறுமை அவசியம்

    செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். பழைய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வாய்ப்பு மெதுவாக உருவாகும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடு வரலாம். பேசிப் புரிந்துகொண்டால் சரியாகும், உறவுகளில் பொறுமை தேவை.

    English Summary

    Viruchigam Rasi Palan: Let us take a detailed look at the weekly predictions and remedial measures for the Scorpio zodiac sign for the period spanning May 25th to May 31st (Vaikasi 11th to 18th). In this astrological article, you will discover how this week is likely to unfold, the specific outcomes you can expect, and the deities you should worship.