துலாம் முதல் மீனம் வரை.. இந்த 6 ராசிகளுக்கு இந்த வாரம் அடிக்கப்போகும் யோகம் என்ன?

  • Rasi palan this week: செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 22 முதல் 27) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 22 முதல் 27) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் குறையக் கூடிய காலகட்டம். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.

    Advertisement

    விரயத்தில் குரு அமர்ந்திருப்பதால் புதிய லோன் கிடைக்கும். புதிய இடமாற்றம் செய்வது, இடம் வாங்குவது, மருத்துவ செலவுகள் குறைவது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அற்புதமான மாற்றம் உண்டாகும். சிறிய சிறிய சண்டை, சச்சரவுகள் வந்து போகும். எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமாக நடக்கும். பல விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறுவீர்கள். முருகன் வழிபாடு நன்மை பயக்கும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிரிகளை வெல்லும் யோகம் ஏற்படும். பொறுமையாக எல்லா காரியங்களையும் செய்வது நல்லது. குரு 9 ஆம் வீட்டில் இருப்பதால் பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் பரவும் நோய்களில் மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். உறவுகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். உறவுக்குள் இருந்து வந்த சங்கடங்கள், மனக்கசப்புகள் நீங்கும். அறிவு, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பெயர், புகழ், அங்கீகாரம், பெரிய பணம் கிடைக்கும்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது தடைகளை தவிடு பொடியாகும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் சந்தோஷம் ஏற்படும்.

    Advertisement

    இந்த வாரம் அருமையான வாரமாக இருக்கும். 10 இல் ஒரு பாவி இருக்கிறார். கன்னி ராசியில் புதன் வந்து கன்னி ராசியில் பலமாக அமர்ந்திருக்கிறார். சுக்கிரனும் ஆட்சி பலத்தில் அமர்ந்திருக்கிறார். 10, 11 ஆம் இடம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வேலையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படும். 2, 3 வேலை கிடைக்கும். பெரிய மாற்றங்கள் உண்டாகும்.

    அலுவலகம் ரீதியாக நல்ல பொறுப்புகள் வந்து சேரும். எழுத்து, மாத்திரை, பள்ளி, கல்லூரிகளில் வேலை கிடைப்பது, ஐடி துறையில் டேட்டா தலைமைப் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் பலமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள், நண்பர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சேரும். பெரிய அளவில் லாபம், வெற்றியும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசியினருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்து வரும் பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் நிவர்த்தியாகும். சீட் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மெரிட்டில் சீட் கிடைக்கும். திட்டமிட்ட கல்லூரியில் சீட் கிடைக்கும். புதிய விஷயங்களை எடுத்து செய்வீர்கள். பெரிய அளவுக்கு மாற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

    மனம் சஞ்சலப்படும் சூழ்நிலையில், சஞ்சலப்படாமல் எளிமையாக காரியத்தை முடிக்கும் நல்ல அமைப்பு உள்ளது. நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் எளிமையாகக் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. உணவு, பொதுமக்கள், அழகு, ஆடம்பரம் சம்பந்தப்பட்ட தொழில்களில் வெற்றி ஏற்படும்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசியினருக்கு துணை விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் துணை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

    கழுத்து, தோள்பட்டை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியிடத்தில், தொழில் இடத்தில், உத்தியோகத்தில், வியாபாரத்தில், பயணங்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அமைப்பு உள்ளது. சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, கிரகப் பிரவேஷம் செய்வது போன்ற யோகம் உண்டாகும்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். நிறைய பேருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ரத்த சர்க்கரையை பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய பண வரவு, கமிஷன், காப்பீடு பண் போன்றவை வரும். 7 ஆம் இடத்தில் பலமான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெரும் மாற்றங்கள் வந்து சேரும்.

    பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். எல்லா விஷயங்களையும் தடையின்றி முடிக்க அருகில் இருக்கும் வாராஹி அம்மன், காமாட்சி, துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். டென்ஷன், பிரஷர் குறையும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.

    விட்டுப்போன வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டு. ஹோட்டல், பள்ளி போன்றவற்றை ஆரம்பித்து, அதில் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள். கவலைப்படும் அளவுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. நல்ல ஏற்றங்களும், அருமையான வாய்ப்புகளும் வந்து சேரும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    English Summary

    Weekly rasi palan: From September 8 to 13, Thulam to meenam (Libra to Pisces) will experience various positive changes, including career growth, financial gains, new opportunities and relief from long-standing challenges, according to their weekly horoscope.