Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷ ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மனக் குறைகள் தீரும். தொழிலில் திட்டமிட்டு இறங்கி காரியங்களை சாதிப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து தொழிலில் அற்புதமான ஏற்றம் பெறுவீர்கள். கடும் சொற்களைப் பேசுவது, கோபப்படுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும். எல்லா விஷயத்தையும் சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலை ஆட்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய இலகிய சுபாவமே உங்களுக்குப் பலவிதத்தில் சிக்கலைக் கொடுக்கும். அதனால், மற்றவர்கள் ஏதாவது உதவி கேட்டால் கூட முடியும் என்றால் முடியும், இல்லையெனில் முடியாது என்று வெளிப்படையாக கூறிவிடுவது நல்லது. தொழில் ரீதியாக, உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். காது, மூக்கு, தொண்டை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏசியில் படுத்துத் தூங்குபவர்கள், அதுதொடர்பான வேலைகளை செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குளிரில் இருப்பவர்கள், குளிர்ந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ரிஷப ராசியினருக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்கள், வார்த்தைகளில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். துணையின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும். எல்லாவிதத்திலும் அனுகூலம் காணப்படும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வேதனை தீரும். எல்லா விதத்திலும் அனுகூலம் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த நீண்ட நாள் கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த தடைகள் தவிடு பொடியாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும் காலகட்டம். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களுடன் மனத் தாங்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. எதிரிகளை எல்லாம் ஒன்று சேர்த்து நட்பாக்கிக் கொள்வது நல்லது. பெரிய அளவு ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மன அழுத்தம் இருக்கக்கூடிய காலகட்டம். தேவையில்லாத கோபம், டென்ஷன் இருக்கும். பல் தொடர்பான பாதிப்புகளை சரி செய்வீர்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அம்மாவின் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனியை குரு பார்க்கிறார். மிதுன ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் தெளிவு பிறக்கும். நினைத்த விஷயங்கள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நல்ல விஷயங்கள் ஏராளமாக நடக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது வெற்றியைத் தரும். வீடு மாற்றம், இடமாற்றம், வீடு விற்பது, நிலம் விற்பது, நிலம் மாற்றம் போன்ற அமைப்புகள் இந்த வார இறுதிக்குள் முடியும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொண்டை வலி, தொண்டை எரிச்சல், கழுத்து வலி, கைகளில் சுழுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது கவனம் தேவை. போனில் பேசும்போது, வண்டி வாகனங்களில் கவனம் தேவை. தன குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய யோகம் உண்டு. நரம்பு, கண், தலைவலி போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். கடக ராசியினருக்கு நிறைய பொருள் விரயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்கள் செய்யும் சிக்கலால் பெரிய மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் கடக ராசியினர் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான ஏற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். பெருமாள் வழிபாடு நிம்மதியைத் தரும். கழிவுப் பாதை தொடர்பான விஷயங்கள், ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். பதட்டம், மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. ஆடி மாதம் முழுவதும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வேற்றுமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். வண்டி, வாகனங்கள், பிள்ளைகள், துணை விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் அதிகளவிலான சுப காரியங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். வெளியூர் பயணம், வெளிநாடு பயணம் உண்டாகும். சிம்ம ராசியினருக்கு உத்தியோகம் ரீதியாக ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் என நம்பி ஏமாறாமல் உங்களுக்கானவர்களை மட்டும் நம்புவது நல்லது. யார் எதை சொன்னாலும் உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மை தரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். 30 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். காதல் திருமண யோகம் உண்டாகும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். விவாகரத்துக்கு அப்ளை செய்த பெண்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் நிறைய அலைச்சல், மாற்றம், டென்ஷன் உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன், சூரியன் வக்கிரமாக இருப்பது அரசு சார்ந்த துறைகள், பத்திரிகைத் துறைகள், பத்திரப் பதிவுத் துறையில், டாக்குமென்டேஷனில் பிழைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கன்னி ராசியி லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கைகூடும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். லாப ஸ்தானத்தில் குரு பகவான், 10 ஆம் இடத்தில் சூரியன் புதன் வக்கிரமாக உள்ளது. இதுவரை வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். பெரிய அளவுக்கு பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்கள், தோழிகள் எல்லோரையும் தள்ளி வைப்பது நல்லது. கழிவுப் பாதை, பின்புறத்தில் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சுபவிரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பண வரவுகள் வந்து சேரும். ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா செல்லக்கூடிய யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நடக்கும். தெய்வ அனுக்கிரகங்கள் உண்டாகும். முக்கியமான விஷயங்கள் எல்லாம் சரியாக நடக்கும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நிறைய பேர் வஞ்சிக்கும் சூழல் ஏற்படும். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். துலாம் ராசி துலாம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரம் அதிக யோக பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி, குடும்பம் எல்லாவற்றிலும் நன்மைகள் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் உண்டு. உத்யோகம், தொழிலில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக ஆடி மாதத்தில் நிறைவேறும். தெளிவாக திட்டமிட்டால் எல்லாவற்றிலும் ஜெயம் தான். வியாபாராத்தில் அணுகூலன்கள் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பிறக்கும். அசையும், அசையா சொத்து சேர்க்கை உண்டு. வீடு, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும் குரு 10வது இடத்தில் இருப்பதால் உத்யோக மாற்றம் உண்டு. சனி திரிகோணத்தில் இருப்பதால் நல்ல வேலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. 15 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது பகவான்கள் உள்ளனர். தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் , வெளிநாடு பயன்கள் உண்டாகும். கால் வலி, முதுகு வலி, ஜீரண கோளாறு போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணை பற்றி யார் என்ன கூறினாலும் செவி சாய்க்காமல் கடந்து செல்வது நல்லது. பெண் நண்பர்களிடம் சற்று விலகியிருப்பது நல்லது. யாரை நம்பியும் கடன் தர வேண்டாம். அஷ்டமத்தில் செவ்வாய், சந்திரன் இருக்கிறார்கள். விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். விருச்சிக ராசி துலாம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு செவ்வாய், சந்திரன் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் பார்வை பலத்தை கொடுப்பதால் எல்லா விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். மற்றவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பீர்கள். முக்கியமான விஷயங்களை செய்யத் தொடங்குவீர்கள். யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாத தன்மை ஏற்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வேலையில் நிறைய தடைகள், சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடன் பணியாற்றும் பெண்களால் பிரச்சனை வருவது, யாரோ செய்த குற்றத்துக்கு நீங்கள் சிக்கும் சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். சனிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் சொத்துகள் சேரும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு, வண்டி, வாகனங்கள், சொத்துகளை விற்பனை செய்ய விரும்புவோர் விற்பனை செய்யும் அமைப்பு ஏற்படும். வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம், காதல் அமைப்பில் ஒருவிதமான மன கசப்புகள் காணப்படும். சக்கரத்தாழ்வார் வழிபாடு, மந்திரங்களை கேட்பது சிறந்த பரிகாரமாகும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விதமான கஷ்டங்களும் சிறிது காலத்திற்குப் பிறகு பரிபூரண நிவர்த்தியாகும். தனுசு ராசி தனுசு லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம். பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தில் இருக்கின்றீர்கள். வேலைகளும், உங்கள் நிலைமைகளும் மாறும். கால், அடிவயிறு, கழிவுகள் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன், கேது பாக்கிய ஸ்தானத்தில் சேருவது பெண்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மற்றவர்கள் அவர்களைப் பற்றி என்ன பேசினாலும் அவர்களை ஏலனப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்பம், உங்களுடைய காதல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பேச்சிற்கும் செவி சாய்க்காமல் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வது நல்லது. அர்த்தாஷ்டம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் நல்ல காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மகரம் ராசி மகரம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். திருமண அமைப்புகளில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். சுப விரயம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். இழுபறியாக இருந்த பல விதமான சிக்கல்கள் தீரும். வண்டி, வாகனங்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள், இளம் வயதை சார்ந்தவர்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும் அமைப்பு உள்ளது மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். குருவின் பார்வை இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். எடுத்த காரியங்களில் பெரும் ஜெயம் ஏற்படும். நிறைய பேருக்கு மெடிஷன் சீட், அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தில் அடைப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கும்பம் ராசி, கும்பம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும். மகனின் ஆரோக்கியம், படிப்பை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடிட்டிங், அட்மின், பார்மா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறு சிறு தடை, தாமதங்கள் ஏற்படும். கழுத்து, பின்பக்க வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கடன், சட்ட நடவடிக்கைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேதுவால் வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், மன உளைச்சல்களை ஏற்படுத்தும். தாயாருடைய ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூக்கில், கண்ணில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. செல்வாக்குகள் கூடும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கோளார் பதிகத்தை தினந்தோறும் படிப்பது ராகு, கேது தோஷங்களை நிவர்த்தியாக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத விஷயங்கள் யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் உத்வேகம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். பழைய கடன்கள் தீரும் அமைப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மீன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான காலகட்டம். பஞ்சமத்தில் இருக்கும் குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். இயற்கையாகவே சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். எதற்காகவும் மற்றவர்களுக்காக கவலைப்படத் தேவையில்லை. முன்னேற்றத்திற்கான பாதையாக இருக்கும். நம்பிக்கை நிறைந்த காலகட்டமாக இருக்கும். புதிய அறிமுகங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விதத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். அடிவயிறு, முதுகு, கழிவுப் பாதையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் கைகளில் பாதிப்பு, கண், காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் வருவதற்கான அமைப்பு உள்ளது. பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியத்தைக் கொடுக்கும். பெரிய நபர்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடத்தி முடிக்கும் அமைப்பு உள்ளது.மேஷம் ராசி பலன்
ரிஷபம் ராசி பலன்
மிதுனம் ராசி பலன்
கடகம் ராசி பலன்
சிம்மம் ராசி பலன்
கன்னி ராசி பலன்
துலாம் ராசி பலன்
விருச்சிகம் ராசி பலன்
தனுசு ராசி பலன்
மகரம் ராசி பலன்
கும்பம் ராசி பலன்
மீனம் ராசி பலன்