Weekly Rasi Palan: துலாம் முதல் மீனம் வரை.. இந்த 6 ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி?

  • Rasi palan this week: செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 29 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 29 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம், ஏற்றம் உண்டாகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். மனதில் ஒரு இனம்புரியாத தன்மை ஏற்படும். அலைச்சல்கள் ஏற்படும். ஆனாலும், நிறைய ஏற்றங்கள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டப்படும். பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது

    ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால் பகுதிகளில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. கடனால் சிக்கிக் கொள்ளும் அமைப்பு உள்ளது. ஐடி பிரச்சனைகள், ஆவணங்களில் பிரச்சனைகள், இரவு நேரப் பயணங்களில் சிக்கிக் கொள்வது போன்ற அமைப்பு உள்ளது. நிறை. டென்ஷன் ஏற்படும். இருக்கும் வேலையை விடும் நிலைமை, புதிய வேலைக்குச் செல்வது, வேலை வேண்டாம் தொழில் செய்து கொள்ளலாம் என்கிற விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    அடுத்த ஒரு மாதம் நிம்மதி, தூக்கம் இருக்காது. யாரையும் நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏமாந்து போவற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திங்கள்கிழமைகளில் பெருமாள் வழிபாடு, விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு லாப ஸ்தானம் வலுவாக இருப்பதால் 18 ஆம் தேதியில் இருந்து எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். எதிர்பாராத பெயர், புகழ், பதவி, சான்றிதழ், பாராட்டு கிடைக்கும். ஆனால், இவை அனைத்தும் மிகவும் தாமதமாக, தள்ளிப்போய் நடக்கும். அடுத்த ஒரு மாதத்திற்கு உங்கள் மூத்தவர்களாலும், நண்பர்களாலும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    கால் எலும்பில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கால்சியம் குறைபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வரும். சக ஊழியர்கள், நண்பர்கள் உங்கள் மேல் பொறாமைப்படும் நிலைமை இருக்கும். பதட்டமான நிலைமை, பொறாமை இருக்கும். நண்பர்கள், மூத்தவர்களை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    குரு பார்வையில் இருப்பதால் அற்புதமான ஏற்றம் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பணத்தை எங்கேயாவது கொண்டு போய் சிக்கிக் கொள்ளும் அமைப்புள்ளதால் கவனம் தேவை. அண்ணன், தம்பி யாருக்காவது பண உதவி செய்தால் திரும்பி வராது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் நடக்கும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் அதிகமாக ஏற்படும். இருப்பினும், அதற்கேற்ப நல்ல வருமானம் உண்டாகும். உறவு மற்றும் நட்புகள் வீட்டுக்கு வந்து செல்வார்கள். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

    துணையை மட்டும் காயப்படுத்துவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்வார்கள். அவர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளால் பாராட்டு பெறுவீர்கள். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

    வேலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். போராட்டத்தைக் கொடுக்கும். வேலையே வேண்டாம் என்கிற நிலைமை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொடைப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். உணவால் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் குரு, 10 ஆம் இடத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் ஒரு மாதத்திற்கு குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

    மகரம் ராசி பலன்

    மகர ராசியினருக்கு முன்னேற்றத்திற்கான முக்கியமான காலகட்டமாக இருக்கும். இடுப்பு, வயிறு, பின்பகுதிகளில் வரும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் தடைபடுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் பயணம் செய்வோருக்கு தள்ளிப்போகும் அல்லது தடைபடும்.

    வெளிநாடுகளில் ஆவணங்கள் தொடர்பான விஷயங்கள் காணாமல் போவது, சட்ட சிக்கலில் சிக்குவது போன்ற அமைப்பு உள்ளது. அப்பா சொத்துகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உயர்கல்வியில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    தேவையில்லாமல் தகவல் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த ஒரு மாதத்திற்குள் கெட்ட செய்திகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சண்டை, சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் வரப்போவதால் வேலையில் பெரிய அளவு பிரச்சனைகள் ஏற்படாது. உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரு அந்நியோன்யமே இருக்காது. யாரையும் தனக்கு பிடிக்காது என்கிற நிலைமை இருக்கும். குருவின் பார்வை இருப்பதால் எல்லா காரியங்களையும் ஈஸியாக முடிப்பது, அதில் ஜெயிப்பது போன்ற அமைப்பு உள்ளது.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசியினருக்கு உறவுகளுக்குள் இருந்த அனைத்து சிக்கல்களும் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை சாதாரணமாக எண்ணுவது வருத்தத்தைத் தரும். நண்பர்கள் உங்களை உசுப்பேற்றும் வாய்ப்புள்ளதால் அதீத கவனம் தேவை. மற்றவர்கள் யாரையாவது பற்றி குறை சொன்னால் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து கொள்வது நல்லது.

    அரசுத் துறை, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் தரும். முடிந்த அளவுக்கு தானங்கள் அளிப்பது நல்லது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தை கடைப்பிடிப்பது நல்லது. அல்லது புதன்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். நிறைய பொறுப்புகள் வரும். அவை சுமையாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

    மயக்கம், தலைசுற்றல், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதன்கிழமையில் பெருமாள் தாயாரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். அனுமன் சாலிஷா, விஷ்ணு சஹஸ்ஹர நாமம் படிப்பது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்மையைத் தரும். கால பைரவரை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினருக்கு அடுத்த இந்த வாரம் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் நிறைய பிரச்சனைகள், பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவிக்கு வயிறு சார்ந்த அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.

    வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி சரக்கு கொடுத்தால் பணம் மாட்டிக் கொள்ளும் அமைப்பு உள்ளது. எந்த பொறுப்பாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்திற்கு தோற்கும் நிலை இருக்கும். எந்த விஷயத்திலும் அவசியமில்லாமல் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

    பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்வது பரிபூரண தெய்வ அனுக்கிரகத்தை கொடுக்கும். குழந்தைகளின் அரவணைப்பு கிடைக்கும். மற்றவர்களால் நிறைய குழப்பம் வரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தலை முதல் கால் வரை எலும்புப் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கபாலீஸ்வரர் வழிபாடு, உக்கிர நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan from September 15 to 20: Thulam to meenam zodiac signs may experience positive changes in career, finances, family and overall progress, along with some areas requiring caution.