வார ராசி பலன்: அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசியினர் யார்?.. பணம், பதவி, சொத்து யோகம் கைகூடுமா?

  • Rasi palan this week: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 19 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

    அந்த வகையில், அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினர் குடும்பத்தில் உங்களுடைய துணை எங்கேயே இருக்கும் கோபத்தை உங்கள் மேல் காட்டுவார்கள். காதலிப்பவர்களுக்கும் துணை உங்கள் மீது கோபப்படும் அமைப்பு. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்வது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள்.

    வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற நல்ல அமைப்புகள் உள்ளது. நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கெளரவம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். எதிர்பார்க்காத நன்மைகள், சந்தோஷம் ஏற்படும். பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

    Advertisement

    கணவன், மனைவிக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். வீடு, சொத்து சுகங்கள் அமையும். வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, முதுகுவலி, பின்புற வலி போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. பித்ருக்கள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு செய்வது அனுகூலத்தைத் தரும்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு பழைய கடன்களை அடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பழைய நட்பின் மூலமாக வரும் பிரச்சனைகளை முடித்து வைப்பீர்கள். குடும்பத்தில் உள்ள இளைய சகோதரன், சகோதரிக்கு திருமணமாகும். கடன் கேட்டு கிடைக்காதவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை அதிகரிக்கும். சர்க்கரையை தவிர்ப்பது, உணவில் டயட்டை கடைப்பிடிப்பது போன்றவற்றை செய்வீர்கள்.

    Advertisement

    குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவால் பிரச்சனை ஆவது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணம், காசுக்கு தட்டுப்பாடு இருக்காது. கணவனாக இருந்தால் மனைவியும், மனைவியாக இருந்தால் கணவரும் கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

    வழக்குகளிலும், எதிரிகள் விஷயத்திலும் வெற்றி ஏற்படும். நிறைய யோக பலன்கள் கிடைக்கும். எதிர்பார்க்காத நன்மைகள், அனுகூலம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் துணை, துணைவியாரின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். அண்ணன், தம்பி, மச்சான் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிவனுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுனம் ராசியினருக்கு மிகப்பெரிய அனுகூலம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய நீச்சமாகி குருவுடன் சேர்ந்திருப்பதால் உஷாராக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மன அழுத்தம் தீரும். இதுவரை இருந்து வந்த மரண பயம் நீங்கும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவதை நன்மையைத் தரும்.

    பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ஆகியை குரு பார்வை இருப்பதால் அடுத்த ஜூன் வரை அற்புதமாக இருக்கும். பதவி உயர்வுகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கிடைக்கும். அரசுத் தொழிலில் மாற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் புகழ் கிடைக்கும்.

    உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மனதில் சந்தோஷம் ஏற்படும். நட்பு வட்டாரங்கள் அதிகரிப்பார்கள். நீச்சம் பெறக்கூடிய செவ்வாயால் சிலருக்கு பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கையில் சிறு பாதிப்புகள் வரும். குடும்பத்திற்குள் பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    கடகம் ராசி பலன்

    கடகம் ராசியினருக்கு நிறைய நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. துணை விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேருவீர்கள்.

    தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். அரசு உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு எதிராக மாறுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. சனி வக்கிரமாக இருப்பதால் அஷ்டமத்தில் இருக்கும் பலனைத் தரும். அதனால், யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

    சந்திரன், செவ்வாய், குரு, சனி வக்கிரம் என 4 கிரகங்கள் செல்வதால் நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டாலும் ஆரோக்கியத்தில், வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலையில் நீர் கோர்ப்பது, தொண்டை உபாதைகள், கழுத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சொத்துக்கள், பொருளாதாரத்தில், குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்மம் ராசியினருக்கு விரயத்தில் இருக்கும் செவ்வாய் நீச்சமாகியுள்ளார். குரு சந்திரன் சேர்ந்து விரயத்தில் நீச்சபங்க யோகம், அஷ்டமத்தில் சனி உள்ளது. பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. பெரியவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளை பார்த்துக் கொள்வது நல்லது. ராசியதிபதி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரன் தொடர்பில் இருப்பதால் சளி பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

    தலைவலி, சைனஸ், ஒற்றை தலைவலி, கண் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பித்ரு காரியங்கள் சரியாக செய்பவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. உபஜெய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் உள்ளனர். அதில், சுக்கிரன் வக்கிரமடைவது நன்மையைத் தரும். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு திருமண யோகம் உண்டாகும்.

    வண்டி வாகனங்கள் யோகம் ஏற்படும். இடமாற்றங்கள் வரும். பழைய நட்புகள், விவகாரங்கள் எது இருந்தாலும் திரும்பி வரும். வீடு வாங்குவது, சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். குரு அதிசாரமாக மாறுவதால் சிம்மத்திற்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும். பெரிய ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். நிறைய நல்ல காரியங்களைத் தொடங்குவீர்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வது, லட்சுமி நாராயணப் பெருமாள், லட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு வஸ்திரம் சாற்றுவது, அபிஷேகம் சாற்றுவது நல்லது.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினர் தூக்கத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. சூரியன் ராசியிலேயே இருப்பதால் குடும்பம், தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

    இழுபறியாக இருக்கும் விஷயங்களால் கோபம் ஏற்படும். உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என இருப்பது நல்லது. இல்லையெனில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் திட்டமிட்டு ஒன்றை செய்வீர்கள். அவை வேறு விதமாக நடக்கும். அதனால், கவனமாக இருக்க வேண்டும்.

    புதிய முயற்சிகள் தள்ளிப்போய் நடக்கும். நாம் எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில விஷயங்கள் நமக்கு சாதகமாக முடியும். பணம், காசில் பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், குரு பலமாக இருக்கிறது. அங்கு சந்திரன் செல்கிறது. மூத்தவர்கள், அண்ணன், தம்பி, இடமாற்றம், பொருளாதாரம், நிலம் சார்ந்த விஷயங்களில் 90 சதவீதம கண்டிப்பாக நல்லபடியாக முடியும். சிவபெருமான் வழிபாடு நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    From Mesham to Kanni, these six zodiac signs may experience positive developments in career, finances, family, property and relationships between October 6 and 11, while health and communication require attention.