Rasi palan this week: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 19 முதல் 24 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு நிறைய விரயமும், அலைச்சலும் உண்டாகும். குடும்பத்தில் துணை, பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளால் கவலைகள், மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. தொழில், உத்தியோகம் வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த அனைத்து சங்கடங்களும் நீங்கும். சினிமா, மீடியா, கலைத் துறையில் இருப்பவர்கள் பெரிய விருதுகளைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித் தொழில் தொடங்குவீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். வண்டி வாகனத்தில் நிறைய நல்லவை நடக்கும். மிகப்பெரிய சந்தோஷங்கள் காணப்படும். புதிதாக தொடங்கும் விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் தோல் பிரச்சனை, தொடைப் பகுதி, அடிவயிறு, மறைவு ஸ்தானங்களில் சில பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். பெண்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். விருச்சிகம் ராசியினருக்கு நல்ல காரியங்கள், நல்ல விஷயங்கள் ஏராளமாக நடக்கும். பாக்கியத்தில் இருக்கும் கிரகங்கள், பஞ்சமத்தில், விரயத்தில் இருக்கும் கிரகங்கள் சுப விரயங்களைக் கொடுக்கும். வீடு வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வது, வீடு கட்டுவதற்குத் திட்டமிடுவது, வண்டி மாற்றுவது, புதிய வண்டி வாங்குவது, பணத்தை டெப்பாசிட் செய்வது, முதலீடு செய்வது போன்ற நல்ல அமைப்பு உள்ளது. லாபத்தில் இருக்கும் சூரியன் பலம் குறைந்து இருப்பதால் நண்பர்கள், பெரியவர்கள், சித்தப்பாக்கள், மேலதிகாரிகள் மூலமாக சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக விரதம் இருப்பீர்கள். தெய்வத்தின் அனுக்கிரகம், தரிசனம் கிடைக்கும். பிள்ளைகள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். பலவிதமாக இருந்து வந்த சங்கடமான நிலைமைகள் நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தனுசு ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் அமர்ந்திருப்பதால் வேலையில் கடுமையான அழுத்தம் ஏற்படும். நிறைய பேர் வன்மத்தோடு செயல்படுவார்கள். நண்பர்கள் உங்களை காப்பாற்றுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குரு அதிசாரமாக மாறுவதால் உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள், சுப காரியங்கள் நடக்கும். முக்கியமான கடன் கிடைக்கும். கார் வாங்கும் யோகம் ஏற்படும். முழு சந்திர பலத்தோடு இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வயிறு உபாதைகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நிறைய நல்ல விஷயங்கள் ஐப்பசி மாதம் வரை நடக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் பெரிய சந்தோஷங்களும், ஆச்சரியமான முன்னேற்றங்களும் ஏற்படும். திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்துவது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். மகரம் ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி பெறக்கூடிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தூரப் பிரயாணங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 4 ஆம் தேதி வரை தொழிலில் பிரச்சனைகள் இருக்காது. 4 ஆம் தேதிக்குப் பிறகு பணம் எங்கேயாவது கொடுத்தால் திரும்ப வருவதில் பிரச்சனைகள் வரும். ஆடம்பரப் பொருள்கள் விற்பனை, சேலை விற்பனை, மேக்கப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு பணம் வருவதில் நிறைய பிரச்சனைகள் வரும். நிறைய வக்கிரம் பிடித்த மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரிய அளவுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வராது. பாக்கிய ஸ்தானம் வலுவிழந்து இருப்பதால் எந்த முயற்சிகள் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. தூர சொந்தத்தில் சில கெட்ட காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கும்பம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தர்க்கங்களைத் தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருக்கும் காரியங்களால் தேவையில்லாத பதட்டம் ஏற்படும். மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வது, விரதம் இருப்பது நன்மை பயக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரியவர்களால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட, அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வயிறு உபாதைகள், வேலையில் உள்ள டென்ஷன், பணி அழுத்தம் போன்றவை இருக்கும். இஎம்ஐக்கள் சென்று கொண்டிருப்பதால் அவற்றை பார்த்து சமாளிப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் நிறைய பேருக்கு குடும்பம் அமையும். பெரிய முன்னேற்றத்தைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிறைய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். டிசம்பருக்குப் பிறகு 3 மாதம் அருமையாக இருக்கும். சிதம்பரம் நடராஜரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். மீனம் ராசியினருக்கு எல்லோருமே ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் உற்றார், உறவினர்கள், ரத்த பந்த உறவுகளில் கெட்ட செய்திகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வரும் அமாவாசை நல்லது இல்லை. குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணைவியின் தேக ஆரோக்கியம், குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். வீடு, நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களின்போது புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். மதுரை, திருப்பதி செல்லும்போது மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். பஞ்சபூதங்கள், நெருப்பு, நெரிசலால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மீனாட்சியம்மனை வீட்டிலேயே வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.துலாம் ராசி பலன்
விருச்சிகம் ராசி பலன்
தனுசு ராசி பலன்
மகரம் ராசி பலன்
கும்பம் ராசி பலன்
மீனம் ராசி பலன்