Weekly Rasi Palan: ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 26 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 26 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷ ராசியினருக்கு எதிர்பார்த்த விஷயங்களில் நன்மைகள் நடக்கும் வாரம் இது. இடம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பலவிதமான கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பெரிய வெற்றிகள் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மகான்கள் தரிசனம், தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். சூரியன், குரு, புதன் ஆகியவை நல்ல நிலையில் இருக்கின்றன. அதனால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராசியதிபதி 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். நினைத்ததை சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், கேது இருப்பது முதல் குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரிஷப ராசியினருக்கு காதல் கைகூடும். பழைய காதலன், காதலி, பழைய வரன்கள் கைகூடும் காலகட்டம். குடும்பத்தில் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வர வேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். மருமகள், மருமகன் சண்டைகள் தீரக்கூடிய நேரம். மனதில் இருக்கும் எண்ணங்கள் ஈடேறும். நினைத்த காரியங்கள் கைகூடும். குரு, புதன், சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க கோட்டக்களில் படிக்கும் அமைப்பு உள்ளது. அரசு வேலைகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரன் மூலமாக ஒத்துழைப்பு, உறுதுணை கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் திட்டமிட்ட கல்லூரிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வார்த்தைகளால் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை, தைரியம் ஏற்படும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபரம், படிப்பில் நன்மைகள் ஏற்படும். மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நிறைய நன்மைகள் காணப்படும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகங்கள் உண்டாகும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் புதன், சூரியன், குரு அமர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். தன பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். பணம், பொருளாதாரத்திற்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது. கழுத்து, இடது காது, வலது கால், மாமனாரின் ஆரோக்கியம் கெடுவது, தொண்டை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கடக ராசியினருக்கு அற்புதமான வாரமாக இந்த வாரம் அமையும். எல்லா விஷயங்களும் பாசிட்டிவாக நடக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். மரியாதை தானாக கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் யோகம் உண்டாகும். மதிப்புக்குரிய அனைத்து விஷயங்களும் நடக்கும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நினைத்து பார்க்க முடியாத நன்மைகளும், சந்தோஷங்களும் உண்டாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பிள்ளைகள், துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர்களுடன் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். சிம்ம ராசியினருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்து சேரும். பிஎப், கிராஜுவிட்டி, பென்சன் போன்றவற்றில் இருந்து பணங்கள் வந்து சேரும். நீண்ட கால முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் சிட்டிசன்ஷிப், பிஆர் கிடைக்கும். செட்டிலாகும் யோகம் உண்டாகும். சனி வக்கிரமாக இருப்பதால் இந்தியாவில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பெரிய நம்பிக்கை, அதிர்ஷ்டம் உண்டாகும். நம்பிக்கை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நண்பர்களாலும், மூத்தவர்களாலும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மனதில் இனம்புரியாத வருத்தம், கோபம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரிய அளவிலான சந்தோஷம் உண்டாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கன்னி ராசியினருக்கு யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். லாபம், அனுகூலம், மகிழ்ச்சி ஏற்படும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண யோகம் உண்டாகும். காதல் அமைப்பு கைகூடும். உங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் அனைத்து விதமான மாற்றம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். நீண்டநாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நினைத்து பார்க்காத நன்மைகள் நடக்கும் காலகட்டம். கூட்டுத் தொழிலில் இருந்து தனியாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.மேஷம் ராசி பலன்
ரிஷபம் ராசி பலன்
மிதுனம் ராசி பலன்
கடகம் ராசி பலன்
சிம்மம் ராசி பலன்
கன்னி ராசி பலன்