6 ராசிகளில் எந்த ராசிக்கு ஜாக்பாட்?.. துலாம் முதல் மீனம் ராசிக்கான வார பலன்கள்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 26 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் முதல் மீன வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 26 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரம் என அனைத்தும் அருமையாக இருக்கும். நீண்ட தூர பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விரயத்தில் இருக்கும் சுக்கிரனால் நிறைய சுப செலவுகளைச் செய்வீர்கள்.

    Advertisement

    வாகன பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு யோகம் ஏற்படும். பெண்களுக்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிறைய விஷயங்கள் உங்களுக்கு சதாகமாக நடக்கும். திறன்பட சமாளித்து ஜெயிக்கக்கூடிய நல்ல காலகட்டம். எல்லா விஷயத்திலும் சந்தோஷமும், தைரியமும் ஏற்படும். முயற்சி செய்யும் காரியங்கள் கைகூடும்.

    மன அழுத்தத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்யாத அளவுக்கு சோம்பலாகி விடுவீர்கள். யார் எதை கூறினாலும் கோபம், மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்கள் உங்களை கேலி, கிண்டல் செய்வதாக நினைத்து உங்களை வருத்திக் கொள்வீர்கள். சனி வக்கிரமாகியுள்ளது, 3க்கும் 6க்கும் உள்ள குரு உச்சமாகியுள்ளதால் எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு பிஸியான வாரமாக இருக்கம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு அமர்ந்திருப்பதால் ஆவணி மாதம் 16 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும். கல்லூரியில் சீட் கிடைப்பது, உயர்கல்வி போன்றவை சாதகமாக இருக்கும். இளைய சகோதரர் வண்டியில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

    பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பரம்பரை நோய், இதய நோய், ரத்தத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனம் தேவை. எதிரிகள் உருவாகி பலப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வாக்குவாதம் போன்றவற்றில் கவனம் தேவை.

    Advertisement

    குரு உச்சமாகி இருப்பதால் காது, மூக்கு, தொண்டை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் குலதெய்வத்தை மனதார தினந்தோறும் வழிபாடு செய்வது நன்மையைத் தரம். தேவையில்லாத சங்கடங்களில் இருந்து விடுபடுவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றங்கள் காணப்படும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். அஷ்டமத்தில் 3 கிரகங்கள் இருப்பதால் இரண்டாவது வேலைகள் கிடைக்கும். எல்லா விஷயங்களும் வேகமாக நடக்கும். சொந்தபந்தங்களால் பிரச்சனைகள் வந்து போகும். கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. 3 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் ஒருவிதமான தைரியம் இருக்கும்.

    Advertisement

    மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலைகள், உறவுகள் ஏற்படும். மன வருத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மன வருத்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். ஏற்றங்கள் அதிகரிக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டு. சுப விரய பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் நிறைய அனுகூலங்கள் கிடைக்கும்.

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசியினருக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். ராசியதிபதி சனி பகவான் 3 ஆம் இடத்தில் வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். எழுத்து சம்பந்தப்பட்ட, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களையும் சமாளித்து முடிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

    காலநிலைமைகள் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மன தைரியம் அதிகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சொத்து, வண்டி, வாகனம் போன்றவை அமைவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

    குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு இல்லாமல் பாத்துக் கொள்ள வேண்டும். துணையுடன் மன வருத்தங்கள் வேண்டாம். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். விநாயகர் வழிபாடும், நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கழுத்து வலி, முதுகு வலி, சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசியினருக்கு நிறைய பிரச்சனைகள், சண்டைகள் ஓயும். வீடு, வண்டி, வாகனம், அப்பார்ட்மென்ட் வாங்கும் யோகம் உண்டு. கடன் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வலிமையாக உழைக்கத் தொடங்குவீர்கள். அடுத்த வாரத்தில் இருந்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சூரியன் 7 ஆம் இடத்தில் இருப்பதால் கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.

    குடும்ப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் புதிய உறுப்பினர் வீட்டில் வந்து சேரும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மருமகள், மருமகன் வரும் அமைப்பு உள்ளது. பெரியப்பா, சித்தப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கழுத்து, இருதயம், ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

    குடும்பத்திலும், சமுதாயத்தில் நீங்கள் கொடுத்த வாக்குகளை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வயதில் முதிர்ந்தவர்கள் ஆரோக்கியத்தில் இந்த வாரம் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பழி சொல்லுக்கு ஆளாவது, சட்ட சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இளம் வயதினருக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினருக்கு யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாரம். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், பழக்கவழக்கம், உங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் ஏற்படும்.

    பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதங்கள் ஏற்படும். தொழிலில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்ட பாதிப்புகள் நிவர்த்தியாகும். குரு பார்வையால் நிறைய நன்மைகள் ஏற்படும். யோசிக்காமல் எல்லா விஷயங்களையும் செய்யக் கூடிய உங்களுக்கு நல்ல அனுகூலங்கள் ஏற்படும்.

    வேலை, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் சிக்கல்கள் நீங்கும். சாதகமான நிலைமைகள் ஏற்படும். அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரக்கூடிய நல்ல காலகட்டம். தொழில் செய்வதற்கான அரசு உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Thulam to Meenam rasi people during this week of August 11 to 16.