மேஷம் முதல் கன்னி வரை.. இந்த 6 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. வார பலன் முழு விவரம்

  • Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு குடும்பத்தில் துணைக்கு தேவையான விஷயங்களைச் செய்து கொடுப்பது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக பெரிய வெற்றிகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகலவிதமான கஷ்டங்களும் பரிபூரண நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

    வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்த பயணங்கள் அனுகூலத்தைத் தரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் பொறுமையாக செயல்படுவது நன்மையைத் தரும். ஆவேசப்படுவது, கோபப்படுவதைத்த தவிர்ப்பது நல்லது. உங்களை நேசிப்பவர்களிடம் நீங்கள் பழகுவது, அவர்களை அரவணைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.

    Advertisement

    நிறைய பேருக்கு நல்ல இடமாற்றம் கிடைக்கும். இந்த வாரம் நிறைய பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஏற்றம். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம், நல்ல மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். நேர்மையாக இருக்க முயற்சி செய்வீர்கள். வரதராஜப் பெருமாள் வழிபாடு நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு அரசுத் துறை, உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு போன்ற விஷயத்தில் அற்புதமான ஏற்றங்களும், சந்தோஷமும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். நிறைய விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷத்தையும், வெற்றியையும் ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும்.

    Advertisement

    குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. துணை விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும்.

    தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. முக்கியமான காலகட்டமாக இந்த வாரம் இருக்கும்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்கள், கொடுக்கல் வாங்கலில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய மன வருத்தங்களை ஏற்படுத்தக் கூடிய காலகட்டம் என்பதால் கவனம் தேவை. உறவுக்காரர்கள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனைகள் தீரக்கூடிய வாரமாக இருக்கும். நல்ல மருத்துவர்கள், மருந்துகள் கிடைக்கும்.

    பூர்வீகத்தில் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் தடையாய் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வயிற்று உபத்திரவம், அசிடிட்டி பிரச்சனை, அலர்ஜி பிரச்சனையை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல அமைப்பு. அற்புதமான வாரமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிர பகவான் வக்கிரமாக இருக்கிறார். ராசியதிபதி பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியனோடு சேர்ந்திருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். சூரியன் நீச்சம் என்பதால் பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் படிப்பு, ஹாஸ்டலுக்கு வெளியில் செல்வார்கள்.

    கடகம் ராசி பலன்

    கடகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் அதிகமாக இருக்கும். துணை விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    உறவுகளில் இருந்து மேன்மைகள் ஏற்படும். சுற்றி உள்ளவர்கள் செய்யும் துரோகத்தில் கவனம் தேவை. மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். தொழில் ஸ்தானதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானதிபதி நீச்சமாக இருப்பதால் தொழில், உத்தியோகம், கெளரவத்தைக் கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனம் தேவை.

    வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். வீடு கட்டுவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். திருமண யோகம் ஏற்படும். அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாணவ, மாணவிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். பெரிய பதவி உயர்வு கிடைக்கும்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்மம் ராசியினருக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் ஏற்படக்கூடி அமைப்பு. பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றங்கள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் தவறான வழிகாட்டுதல்களை செய்ய வாய்ப்புள்ளது.

    தேவையில்லாமல் உத்தியோகம், வியாபாரத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் பெரும் நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

    பதட்டம், படபடப்பு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சந்திரன் கிளம்புவதால் வெற்றி மேல் வெற்றி வரக்கூடிய காலகட்டம். மனக் குழப்பங்கள் நீங்கி மனம் பரிபூரணமாக தெளிவடையக் கூடிய காலகட்டம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வீட்டில் இருந்து வந்த சண்டைகள், பாதிப்புகள் நீங்கும். எலக்ட்ரிக், ஒயரிங் வேலைகளை செய்வீர்கள். வன்மத்தினால் குற்றங்கள் நடந்த நிலைமைகள் மாறும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்திருப்பதால் குளிர்ச்சியான பொருள்களை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருவும், செவ்வாயும் மிகப்பெரிய ராஜயோகத்தைக் கொடுக்கும். பதவி, பட்டம், புகழ் என அற்புதமான வெற்றிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சொந்த வீடு வாங்கும் அமைப்பு. பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும். வயிறு, குடல், முட்டி சார்ந்த பிரச்சனைகள் குறைந்து கொண்டே வரும்

    விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும். வார்த்தைகளில் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.

    English Summary

    Mesham to Kanni natives may experience career growth, financial gains, property opportunities, family happiness and major life changes during the week of October 19–25.