வார ராசிபலன்: மேஷம் முதல் கன்னி வரை.. இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு குடும்ப விஷயத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. நிறைய சுப காரியங்கள் நடக்கும். வீடு, நிலம், வண்டி வாகனம், பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொறுமையாக கையாளுவது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    இழுபறியாக இருந்த விஷயங்கள் படிப்படியாக மாறும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வரும் நல்ல செய்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். லாபத்தின் அளவு பலமடங்கு உயரும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். ஏராளமான பணிகள், பொறுப்புகள் இருக்கும். பண விஷயம், கொடுக்கல் வாங்கல் என ஏராளமான பணிகள் இருக்கும். அதில் எல்லாம் நீங்களாகவே சிக்கிக் கொள்வீர்கள்.

    Advertisement

    எல்லோருடைய பிரச்சனையையும் உங்களுடைய பிரச்சனையாக கருதிக் கொள்ளாமல் விலகி நிற்பது நன்மையைத் தரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இந்த வாரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். 30 ஆம் தேதி முதல் உங்கள் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமணம் நடப்பதற்கான யோகம் ஏற்படும்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு வயிறு, முதுகு தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சநை தீரும். கொடுத்த வாக்கை வீட்டிலும், வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

    Advertisement

    தொழில், வியாபாரம், படிப்பு, வேலையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு யோக பலன்கள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவரத்தியாகும். உத்தியோகம் ரீதியாக அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். கடல் கடந்து தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது.

    வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். பெரிய மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் யோகத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான வாரமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், ராசியாதிபதி வக்கிரமாக இருக்கிறார். சுக்கிரன் வக்கிரமாக அமர்ந்திருப்பதால் நிறைய பேருக்கு காதல் உறுதியாகும். திருமண யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துக்கள் விற்பது போன்ற யோகம் ஏற்படும். பெரும் பணங்கள் வந்து சேரும். அரசியலில் மாற்றங்கள் கொடுக்கும்

    அரசுத் துறையில் வேலை கிடைக்கும். அரசியலில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு மருத்துவத் துறையில் சேர்க்கும் அமைப்பு உள்ளது. பணப் பற்றாக்குறை, தட்டுப்பாடு நீங்கும். மிதுனத்தில் பிறந்த பலருக்கு திருமணம் நடக்கும். நிறைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும் முயற்சிகள் எல்லாம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கும்.

    குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப காரியத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றமும், தொழில் மாற்றமும், உத்தியோக மாற்றமும், வியாபார மாற்றமும் யோக பலன்களை அதிகளவில் பெற்றுத் தரும். இதுவரை இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.

    கடகம் ராசி பலன்

    கடகம் ராசியினருக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவிகள் தேடி வரும். வீட்டில் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டு. அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது வருவதால் கோடீஸ்வர யோகம் ஏற்படும். வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் அடுத்த 3, 4 மாதங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

    மருமகள், மருமகன் வரக்கூடிய யோகம் உண்டு. பொன், பொருள், ஆபரணங்கள் சார்ந்த சேர்க்கை ஏற்படும். உங்களைப் பிடித்த பீடை ஒழியக்கூடிய காலகட்டம். நிறைய பிரச்சனைகளில் இருந்து வரும் 31 ஆம் தேதியில் இருந்து விடுதலை பெறுவீர்கள். செவ்வாய், கேது சேர்வதால் கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையையும், மனைவியாக இருந்தால் கணவர் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்புறப் பகுதிகளில் வலி, பல் வலி, ரத்த அழுத்தம், தீ விபத்துக்கள் வீட்டில் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் வக்கிரமாக இருப்பது சொத்துக்கள் சேரும். வீடு, அடுக்குமாடி கட்டடங்கள், டியூப்ளக்ஸ் வீடு கட்டுவது போன்ற யோகம் உண்டாகும். வீட்டில் புதிய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவீர்கள். சோஃபா செட் வாங்கி போடுவீர்கள்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்மம் ராசியினருக்கு கோயில், பூஜை, புனஸ்காரம், ஆன்மீகம் என இருக்கக்கூடிய யோகம் ஏற்படும். பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் தன்மை உண்டாகும். பெரிய பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தெய்வத்தின் அனுகூலம் ஏற்படும். சிம்மத்தில் பிறந்திருக்கும் பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் நவம்பர், டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    மூக்கில் பிரச்சனை வருவது, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரக்கூடிய சூழ்நிலை உள்ளதால் கவனம் தேவை. நிறைய பேருக்கு சுப காரியங்கள் நடக்கும். குரு கேது சேரும்போது சிம்மம், மேஷம், தனுசு ராசியில் பிறந்திருந்தாலும் இதயம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

    பெண் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் உண்டாகும். போராட்டத்தில் இருந்து வெளியில் வந்து மன அமைதியைப் பெறுவீர்கள். ஏராளமான சந்தோஷங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், ரெஜிஸ்டிரேஷன், வீடு கட்டுவது, நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைப்பது என யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் அந்நியோன்யமாக இருப்பது நன்மை பயக்கும். விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம், வியாபார மாற்றம் என்று எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். அலர்ஜி தொந்தரவால் தேவையில்லாத மனக்கசப்பு, சங்கடங்கள் ஏற்படும்.

    வேற்றுமொழி மனிதர்களால் அதிகமான ஆதயங்களும், அனுகூலங்களும், வெற்றியும் ஏற்படும். சுப விரயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுவாசத்திலும், உடலிலும் அலர்ஜி வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். கொடுத்த பணம், பாக்கிகளை வசூல் செய்வீர்கள். மனைவிக்கு நெக்லஸ் வாங்கி கொடுப்பீர்கள். வீட்டில் ஆடம்பரப் பொருள்களை வாங்கித் தருவீர்கள். சேமிப்பு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பீர்கள்.

    English Summary

    The weekly horoscope for October 26 to November 1, 2026, highlights potential career growth, financial gains, marriage prospects, property opportunities, remedies and precautions for Mesham to Kanni zodiac signs.