Rasi palan this week: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 26 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பித்துள்ளது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 26 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுக்கிரன் வக்கிரமடைகிறார், புதனோடு சேர்ந்திருக்கிறார். பெண்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும். சிக்கலாக இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் எளிமையாக முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதன், சுக்கிரன் சேர்வதால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். விரயத்தில் சூரியன் இருப்பதால் ஆரோக்கியப் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். நிம்மதி இல்லாத தன்மை தீரும். ஆஸ்துமா, சைனஸ் போன்றவை சரியாகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சூரியன் நீச்சமடைந்தாலும் சனி பார்வையில் இல்லை என்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். விருச்சிகம் ராசி பலன் விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். யோகம், அனுகூலம் காணப்படும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காணப்படும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். விரயத்தில் சுக்கிரனும் புதனும் இருப்பதால் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வழக்குகள் நிவர்தியாகும். தனுசு ராசி பலன் தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். தடைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளதால் கோளார் பதிகத்தை சொல்வது நல்லது. பித்ரு தோஷம் காணப்படுவதால் பெற்றோர் பெரியோரின் மனம் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்ய வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அற்புதமாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமா நீங்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். மகரம் ராசி பலன் மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயிறு, இடுப்பு, பின்புறப் பகுதிகளில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். அப்பாவுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சண்டைகள், வாக்குவாதங்கள், புரிதல் குறைவு போன்றவை நிவர்த்தியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். 10 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வேலை, தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். மனைவி சொத்துக்கள், கணவர் வீட்டார் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நன்மை பயக்கும். இரண்டாம் பாதி 14, 15, 16 ஆம் தேதி அற்புதமாக இருக்கும். இந்த காலங்களில் மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கும்பம் ராசி பலன் கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கக்கூடிய அமோகமான காலகட்டம். நிறைய பிரச்சனைகள் தீரும். படிப்படியாக முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டம். டிசம்பர் மாதம் வரை மட்டுமே அழுத்தங்கள் இருக்கும். நவம்பர் பாதியில் இருந்தே அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். கும்பம், மகர ராசியினர் வீட்டில் சிறிய அறுவை சிகிச்சைகள், தீ விபத்து போன்றவை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய மாற்றங்கள் நடைபெறக்கூடிய காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் தன் வீட்டிலே இருந்து வக்கிரமாவதால் திருமணம், மறுமணம் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். நீங்கள் முயற்சி செய்யும் வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். எல்லா விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். மீனம் ராசி பலன் மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எந்த விஷயத்திலும் அவரசப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும். வயிறு வலி, முதுகு வலி, கண் வலி போன்றவை சரியாகும். நீங்கள் முயற்சி செய்யும் விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். சூரியன் துலாமில் நீச்சமாவதால் பெரிய மாற்றங்கள் காணப்படும். இந்த வாரத்தில் வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். விருந்தாளிகள் வீட்டுக்கு வருவார்கள். புதிய அழைப்புகள் தேடி வரும். சொந்தபந்தங்கள் வாக்குவாதம் செய்தாலும் அதை ஆமாம் என்று சொல்கின்ற நிலைமை ஏற்படும். வாரத்தின் இறுதிப் பகுதியில் கால் முட்டியில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்கள் மேற்கொள்வீர்கள். வேலையில் அலைச்சல் ஏற்படும். இருப்பினும் அவற்றில் ஆதாயம் உண்டாகும்.துலாம் ராசி பலன்