Weekly rasi palan: இந்த வாரம் அதிர்ஷ்டம் தேடி வரும் 6 ராசிகள்.. செப். 7 முதல் 13 வரை என்ன நடக்கும்?

  • Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு துணையுடன் மனஸ்தாபம், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பொறுமையாக இருப்பது நல்லது. சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பதால் துணைக்கு உங்கள் மேல் கோபமோ, வன்மமோ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும். கோபப்படுவது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.

    Advertisement

    புதிய முதலீடுகளை செய்வீர்கள். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்வோருக்கு நல்ல வளர்ச்சி காணக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட செல்வாக்கு பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    ரிஷபம் ராசி பலன்

    யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். சுப காரியங்களில் இருந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளிடம் கோபம் காட்டுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    Advertisement

    நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் ஏற்படும். நம்பிக்கை தரக்கூடிய நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பெரும் வெற்றிகள் ஏற்படக்கூடிய காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். அழகு, ஆடம்பரம் அதிகரிக்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மிதுனம் ராசி பலன்

    தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். துர்க்கை வழிபாடு நம்பிக்கையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    Advertisement

    உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கல் பரிபூரண நிவர்த்தியாகும். பெரும் நம்பிக்கை ஏற்படும் காலகட்டம். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகத்தில், வியாபாரத்தில், தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மன பயங்கள் தீரும். மன அழுத்தத்திற்கு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை பெறுவது நல்லது. இடம் மாறுவது, வீடு மாறுவது, வீடு வாங்குவது போன்ற யோகம் உண்டு.

    கடகம் ராசி பலன்

    புதிய வாய்ப்புகள் கைகூடும். தள்ளிப்போன விஷயங்களை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வேகமாக செயல்படுவீர்கள். 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 3 ஆம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால் ரெஜிஸ்டிரேஷன் செய்வீர்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆடம்பரமான பொருள்களை வாங்கிப் போடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் போன்றவற்றை வாங்குவீர்கள்.

    Advertisement

    எழுத்து, ஓவியம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் போன்றவை கிடைக்கும். புதிதாக வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மன வலிமையோடு வெற்றி பெற்று சாதிப்பீர்கள். அன்புக்குரியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள். முக்கியமாக எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. மகான்கள் வழிபாடு யோக பலத்தை பெற்றுத் தரும்.

    சிம்மம் ராசி பலன்

    பிஸியாக இருக்கும் காலகட்டம். எல்லா விஷயங்களிலும் வேகமாக முடிவெடுத்து அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெறும். பொறுப்புகள் கூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். டாக்குமென்டேஷன் தொடர்பான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம், அலைச்சல் போன்றவை ஏற்படும்.

    திருமண யோகம் உண்டாகும். நல்ல வரன்கள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புதன் ராசி லக்னத்தில் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறது. சுக்கிரன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பேச்சு, பணத்திற்கு குறைவே இருக்காது. இடம், நிலம், வீடு போன்ற விஷயங்களை வாங்கி முடிப்பீர்கள். நிறைய விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அவை உங்களுக்கு சாதகமாக முடியும். சூரியன் ராசியில் இருப்பதால் கோபம், வாக்குவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அனுமன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    கன்னி ராசி பலன்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் காணப்படும். விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உறவுகளுக்குள் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எல்லா வகையான முன்னேற்றங்களும் கிடைக்கும். தேவையற்ற மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    நிறைய பேருக்கு எல்லா விஷயங்களையும் இரண்டு முறை, 3 முறை முயற்சிக்க வேண்யதிருக்கும். நோட்டீஸ், மெமோ வந்தாலும் அவை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலம், இடம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நகை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய கடன்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: From September 7 to 13, Mesham to kanni natives can experience positive changes, career growth, financial gains, relationship developments and new opportunities, with each zodiac sign having specific areas to watch and remedies to follow.