துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு மாஸ் அதிர்ஷ்டம்.. பணவரவு, சொத்து யோகம்

  • Rasi palan this week: செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். துணைக்கும் உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் தீரும். டிசம்பர் மாதம் வரை பிள்ளைகளால் தேவையில்லாத மனக் குழப்பமும், சங்கடங்களும் ஏற்படும்.

    அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் என நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அலர்ஜி, ஹார்மோன் குறைபாடுகளில் மிகுந்த கவனம் தேவை. ஆண்கள் முதுகு வலி, பாத வலி, மூட்டு வலிகளில் மிகுந்த கவனம் தேவை. தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    Advertisement

    பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காரியங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, பணத்தில் கவனம் செலுத்துவது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தடையில்லாமல் நல்ல காரியங்கள் நடக்கும். வீடு வாங்குவது, சொத்துகள் வாங்குவது, கிரயம் செய்வது போன்ற யோகம் உண்டாகும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். மதிப்பு, மரியாதை கூடும். எல்லா விதமான வசந்தங்களும் ஏற்படும். தொழிலில் இருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமையில் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பது நன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் தீரும்.

    அமோகமான வாரமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்வது, தூரதேச பயணங்கள் மேற்கொள்வது போன்ற யோகம் ஏற்படும். வண்டி, வாகனங்களை மாற்றும் யோகம் உண்டாகும். மூட்டு அறுவை சிகிச்சை வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு செய்வீர்கள். இடத்தை விற்று, வீட்டை விற்பனை செய்து பெரிய பணங்கள் கைக்கு வரும் அமைப்பு உள்ளது. புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் ஏற்படும்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வேலையை விடலாமா, தொடரலாமா என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். மேலதிகாரிகளின் டார்ச்சருக்கு யோசித்து வேலையை விடலாம் என்கிற சிந்தனையைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி தொடர்பான பாதிப்புள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    மூன்றாம் இடம் மிகவும் வலிமையாக இருப்பதால் அசுர பலம் ஏற்படும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் என்பதால் எல்லா விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு எதிராக நிறைய விஷயங்களை சிலர் செயல்படுத்துவார்கள் என்பதால் கவனம் தேவை. படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் 6 மாதமாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

    மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் எல்லாமே தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடம் நன்றாக இருப்பதால் நிறைய பேருக்கு திருமணம் நடக்கும். மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில் சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். முயற்சிகள் தடைபட்டு தள்ளிப்போய் நடக்கும். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.

    அஷ்டமத்தில் கேது இருப்பதால் எல்லா விஷயங்களிலும் சோர்வு ஏற்படும். பயம், கலக்கம், குழப்பம் ஏற்படும். கைக்கு வந்த விஷயங்கள் தள்ளிப்போய் நடக்கும். பாக்கிய ஸ்தானம் வலுவிழந்துள்ளது. பயணங்கள், பெரியவர்களின் ஆரோக்கியம், இடுப்பு, புட்டம், ஆசனவாய், முதுகுத் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    பொறுமையாக இருந்தால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய மாற்றங்களும், சந்தோஷமும் ஏற்படுத்தும். வீடு, நிலம், பதவி போன்றவற்றிற்கு முயற்சி செய்தால் தள்ளிப்போய் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். உறவுக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். வெள்ளிக்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது யோகத்தைத் தரும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை.

    சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவோரிடம் பழகுவதை தவிர்ப்பது நல்லது. தலைவலியைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை, நரம்பு தொடர்பான பாதிப்புகளில், மருந்துகளை உட்கொள்ளும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. மன அழுத்தத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். எதிரிகள் பலமாக இருக்கக்கூடிய காலகட்டம் என்பதில் பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும்.

    எந்தொரு விஷயத்துக்கும் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். உங்களை நிறைய பேர் சீண்டிப் பார்ப்பதற்கான நேரமாக இருக்கும். ஆண்கள் பழக்கவழக்கங்களிலும், உறவுமுறைகளிலும் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதாரத்தில் நிறைய ஆசைகள் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவதொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு துணை விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. தேவையில்லாத தகராறுகளைத் தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும்.

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் ஏற்படும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

    உறவுகளுக்குள் சிக்கல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்தவிதமான இடமாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல காலகட்டம். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. இந்த மாதம் முழுவதும் தலைவலி, டென்ஷன், தூக்கமின்மை இருந்து கொண்டே இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: Weekly horoscope for Thulam to Meenam (Libra to Pisces) covering career, finance, relationships, property, travel, family, health, luck and precautions from September 22 to 27.